மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயில் ஏழூர் திருவிழா எனப்படும் சித்திரை சப்தஸ்தான பெருவிழா தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

சோழர் காலத்து திருக்கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஐயாரப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நாதசன்மா, அனவித்தை ஆகிய சிவபக்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்குரியதாகும். திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழா போன்று இங்கும் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஏழூர் திருவிழா

இக்கோயிலில் ஏழூர் திருவிழா எனப்படும் சித்திரை சப்தஸ்தான பெருவிழாவில் மயிலாடுதுறை மாயூரநாதர், கூரைநாடு புனுகீஸ்வரர், சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர், மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர், சோழம்பேட்டை அழகியநாதர், திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் ஆகிய ஏழு கோயில்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பாடாகி ஒரே இடத்தில் சப்தஸ்தான விழா நடப்பது வழக்கமாகும்.

நல்லா கேட்டுக்கோங்க... இதான் சான்ஸ், பயன்படுத்திக் கொள்ளுங்கள் - அப்புறம் வருத்தப்படாதீங்க..!

திருத்தேரோட்டம்

நிகழாண்டு சப்தஸ்தான பெருவிழா கடந்த மே 3 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவாக கடந்த 10 ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அறம்வளர்த்த நாயகி சமேத ஐய்யாறப்பர் சுவாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மூன்று தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

காவல்நிலையத்தில் பரபரப்பு சம்பவம்...! தீக்காயங்களுடன் காவலர் உட்பட இருவர் மருத்துவமனையில் அனுமதி...!

திருவாடுதுறை ஆதீனம்

அதனைத்தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரானது கோயிலின் நான்கு ரத வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. பொதுமக்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.