'ஐ.நாவில் பண்ரூட்டி’ கவனம் ஈர்த்த அஸ்வத்தாமன் உரை..!

4 weeks ago 6
ARTICLE AD

புவி வெப்பமடைதல் குறித்து ஐ.நா சபையில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றியிருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் பிரமுகரான அஸ்வதாமன். அப்போது அவர் பலாப்பழத்திற்கு பெயர் போன பண்ரூட்டி என்ற ஊரின் பெயரை குறிப்பிட்டு முக்கியமான விஷயத்தை பற்றி பேசியது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

மதம் – நாகரிகம் பற்றிப் பேசிய பாஜக நிர்வாகி அஸ்வதாமன்

தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலராக உள்ள அஸ்வத்தாமன், ஐ.நாவில் பேசும்போது மதமாற்றங்களுக்கு எதிராக இந்திய நாகரீகத்தை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, நாகரிகம் மற்றும் மதம் ஆகிய இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்றும் தற்போதைய மத அமைப்புகள் ’ஒரே கடவுள் ; ஒரே வழிபாடு’ என்ற ஒரே மாதிரியான நடைமுறையை திணிப்பதாகவும் இதுவே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த கூட்டத்தில் அஸ்வத்தாமன் பேசியிருக்கிறார்.

இரண்டு முக்கிய நாகரிங்களை இழந்துவிட்டோம் – அஸ்வதாமன் வேதனை

அதோடு, மதமாற்றங்களால் எகிப்து மற்றும் ரோம நாகரிகங்களை ஏற்கனவே நாம் இழந்துவிட்டோம் என்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க தற்போதைய நாகரிகங்களையாவது பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அஸ்வதாமன் வலியுறுத்தியுள்ளார்.

TN BJP leader Ashvathaman addresses UNHRC; calls for protection of Indian Civilisation against conversions.@blsanthosh @ReddySudhakar21 @NainarBJP pic.twitter.com/yPYkzoBiZp
— Ashvathaman Allimuthu (@asuvathaman) March 16, 2026

சொந்த ஊரின் நதி பற்றி பேசிய அஸ்வதாமன்

குறிப்பாக, தன்னுடைய சொந்த ஊரான பண்ரூட்டியில் ஓடும் கெடிலம் ஆற்றை சுட்டிக் காட்டி பேசிய அஸ்வதாமன், அந்த நதி மகா விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதாக மக்களால் நம்பப்படுகிறது என்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க இதுபோன்ற பாரம்பரிய நம்பிக்கை பெரிதும் பயன்படுகிறது என்றும் அவர் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Read Entire Article