நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அண்மையில் திருமணமின்றி குழந்தைப் பெற்றுக்கொள்வதை தான் ஆதரிப்பதாக பேசியது சர்ச்சைப் பொருளாக மாறியுள்ளது. தனது மகளின் கருத்தை ஆதரித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றும் வெளியிட்டிருந்தார். சத்யராஜ் மற்றும் அவரது மகளின் கருத்தை விமர்சித்து திரெளபதி பட இயக்குநர் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.

பேட்டி ஒன்றில் பேசிய திவ்யா சத்யராஜ் தனக்கு தாலி கட்டி , மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொள்வது போன்ற எந்த சடங்குகளின் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் , ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயமில்லை. திருமணம் செய்யாமல் விருப்பமுள்ளவர்கள் குழந்தைப்பெற்றுக் கொள்ளலாம். என பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில் "திருமணமே செய்துகொள்ளாமல் ஒரு நபர் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் கூட இன்ற மருத்துவ துறை வளர்ச்சியில் அதற்கான சாத்தியம் இருக்கிறது. அப்படி இருக்கையில் இது முழுக்க முழுக்க ஒரு தனி நபரின் விருப்பம். அந்த வகையில் என்னுடைய மகள் திவ்யாவின் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். " என கூறியிருந்தார்

மோகன் ஜி கண்டனம்

சமீபத்தில் திவ்யா சத்யராஜ் அவர்கள் பேசிய காணொளி விமர்சிக்கப்பட்டும் சிலரால் ஆதரிக்கப்பட்டும் வருகிறது. அவர் பேசியது குறந்த பேருக்கு போய் சேர்ந்திருக்கும் என்பதால் அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் அதை ஆதரித்து சத்யராஜ் சார் பேசுனது முக்கியனா விஷயமா பார்க்கப்படுகிறது. அவர் சொன்ன கருத்து எளிதாக ஒரு கோடி பேருக்கு போ சேர்ந்திருக்கும். சார் நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட் என்பது 90ஸ் கிட்ஸ்களுக்கு போய் சேர்ந்திருக்கும். பெரியாரியம் என்றால் என்னவென்று கூட இந்த தலைமுறையினருக்கு தெரியாது. அதனால் நீங்களும் திவ்யாவும் பேசியது தவறு. திருமணம் செய்யாமல் , தாலி கட்டாமல் , பெற்றோர்களின் சம்பந்தம் இல்லாமல் பிடித்தவருடன் சேர்ந்து வாழ்வது தப்பில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். இதைத் தாண்டி யாருமே இல்லாமல் அறிவியல் முறைப்படி குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிற அபத்தமான கருத்தை சொன்னீர்கள்.

ஏசி ரூமில் உட்கார்ந்து பேசாதீர்கள்

வங்கியில் குறந்தது 25 கோடி வைத்திருக்கும் உங்களால் இந்த மாதிரி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். எந்த வித ஆதரவும் இல்லாமல் மூன்று நான்கு வேலைக்கு ஆள் வைத்து நீங்கள் அந்த குழந்தை வளர்த்திடுவீர்கள். முறைப்படி சொந்தங்களை கூப்பிட்டு கல்யாணம் செய்துகொள்பவர்களே அத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டு சாமானிய மக்களால் செய்ய முடியாது. நீங்கள் சொல்வதைக் கேட்டு ஒரு பெண் திருமணன் செய்துகொள்ளாமல் அவருடன் ஒரு குழந்தைப் பெற்றுக் கொண்டால் பாதிக்கப்படப் போவது அந்த பெண் தான் . அந்த ஆண் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டால் அந்த பெண் தனியாக எப்படி அந்த குழந்தையை வளர்ப்பார். ஒரு மாச சம்பளத்தை வைத்துக் கொண்டு சிங்கிள் பேரண்டாக இருந்துக்கொண்டு ஒரு குழந்தையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று கேட்டு பாருங்கள் தெரியும். நாலுக்கு நால் ஏசி ரூமில் உட்கார்ந்துக் கொண்டு செல்வந்தராக வாழ்ந்துக்கொண்டு இந்த கருத்தை சொல்வது ரொம்ப ஈஸிதான். திவ்யா சத்யராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் சொன்ன இந்த கருத்து ரொம்ப தவறானது. 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகள் இந்த கருத்தை கேட்டு தவறான முடிவுகள் எதுவும் எடுக்காதீங்க. "என மோகன் ஜி பேசியுள்ளார்