எல்.ஐ.சி ஹோம் ஃபைனான்சில் 192 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு.

எல்.ஐ.சி ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 192 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹோம் ஃபைனான்சில் அப்ரண்டிஸ் பயிற்சியாளர் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 192 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 27 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 22.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 192

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.lichousing.com/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.09.2025

பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 944, எஸ்.சி, எஸ்.டி, பெண்கள் பிரிவினருக்கு ரூ. 708, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 472. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே காலதாமதம் செய்யாமல் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.