எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சையான வசனம் - தமிழக முதல்வர் விளக்கம்

8 months ago 10
ARTICLE AD

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரை காட்சிகளை எம்புரான் திரைப்படக்குழு நீக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தென்தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு பல முறை தொடர்ந்த வழக்குகளைத் தீர விசாரித்த உச்சநீதிமன்றம் சிறப்புப் பொறியியல் வல்லுநர் குழுவை அமைத்து, முழுமையாக ஆய்வு செய்து, அணை மிகவும் உறுதியாக உள்ளதை தனது தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்பிறகும் கேரள அரசின் மறைமுக ஆதரவுடன் மலையாளத் திரைத்துறை தொடர்ச்சியாக இத்தகைய பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டு வருவது இரு மாநில மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கான சதிச்செயலேயாகும் என தென் மாவட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் பெற்றுள்ளது.

திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் நேரடியாகவே இந்த திரைப்படத்தில் நான்கு இடங்களில் முல்லைப் பெரியாறு அணையை பற்றி இடம்பெற்றுள்ளது. முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, ஆங்கிலேய அரசுக்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் மன்னர்,999 வருடங்களுக்கு இலவயமாக எழுதிக் கொடுத்தாராம்.எழுதி வாங்கிய பிரிட்டீஷ்கார்கள் போய்விட்டனர். மன்னராட்சியும் போய் விட்டது ;ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்கிறது என்று ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் மீண்டும் எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு விவசாய சங்கத்தினர்களும் இந்த படத்திற்கு எதிராக போட்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். எனவே இத்திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் எம்புரான் திரைப்படம் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்த நிலையில்,

இன்று எம்புரான் படத்தில் இடம்பெற்றுள்ள முல்லைப் பெரியாறு அணை குறித்த வசனம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர்  ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் எம்புரான் பட காட்சிகளை சென்சாரில் கட் செய்யவில்லை படம் வெளியாகி எதிர்ப்பு கிளம்பிய பிறகு தான் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்றார். எம்பிரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவை அழியும் என காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்தார். அதற்கு நான் அந்த படத்தை பார்க்கவில்லை என அவை முனைவர் துறைமுருகன் தெரிவித்தார். மேலும் அவர் அந்த படத்தை பார்த்தவர்கள் கூறியதை கேட்டதும் பயமும், கோபம் வருகிறது. தேவையற்ற செயல் அது அந்த திரைப்படத்தால் வேறு மாநிலங்களில் கூட பிரச்சனை வரலாம் என்று கூறினார்.

Read Entire Article