எம்ஆர் ராதா பாத்த அந்த காரியம்.. வருமான வரித்துறையுடன் போலீஸ் போவதற்கு இதுதான் காரணமா?

7 months ago 8
ARTICLE AD

இந்தியாவைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் சம்பாதிக்கும் ஒவ்வொரு குடிமகனும் வருமான வரி செலுத்த வேண்டும். அவ்வாறு வருமான வரி செலுத்தாவிட்டால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இதையடுத்து, குறிப்பிட்ட நபரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படும். அவ்வாறு சோதனை நடத்தப்படும்போது வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காவல்துறை அதிகாரிகள் உடன் செல்வது வழக்கம்.

எம்.ஆர்.ராதா வீட்டில் ரெய்டு:

வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காவல்துறையினர் செல்வதற்கு பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாதான் காரணம் என்று நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் ராப்பர் பட நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, உண்மையான வாழ்க்கையில நடந்த ஒரு விஷயம் ஒன்னு சொல்லுவாங்க. வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து நிற்கிறார்கள் என்றால் நாம் அதிர்ச்சி அடைநதுவிடுவோம் அல்லவா? எம்.ஆர்.ராதா வீட்டுக்கு ஒரு முறை அப்படித்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துவிட்டார்கள்.

எம்.ஆர்.ராதா போட்ட நாடகம்:

என்னனு கேட்டா? வருமான வரித்துறை அதிகாரிகள் நாங்க அப்படினு ஒரு நாலு அஞ்சு பேரு வந்தாங்க. உடனே எம்ஆர் ராதா வெளியில வந்து அய்யய்யோ.. அய்யய்யோனு கத்துனாரு. வீதியில எல்லாரும் எம்.ஆர்.ராதா என் வீட்டுக்குள்ள வந்துட்டு திருடன் என்னை கத்தியை காட்டி மிரட்டுறான், மிரட்டுறான். நீங்கதான் காப்பாத்தனும், காப்பாத்தனும்னு கத்தவும்.

ஜனங்க எல்லாரும் நம்ம எம் ஆர் ராதா வீட்ல உள்ளே புகுந்து எல்லாருக்கும் அடி. இவரு பெட்டி, படுக்கையில என்ன வச்சுருந்தாரோ எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு ரொம்ப பத்திரமா கார்ல போயிட்டாரு. அதுல இருந்துதான் போலீஸ் இல்லாம வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த வீட்டுக்கும் போகக்கூடாதுனு முடிவு பண்ணி ஆரம்பிச்சாங்க அப்படினு சொல்லுவாங்க.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமையாக உலா வந்தவர் எம்.ஆர்.ராதா. குணச்சித்திரம், வில்லன் ஆகிய வேடங்களில் மிரட்டலாக நடித்திருப்பார் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவருடனும் இணைந்து நடித்துள்ளார். அப்போதே திரைப்படங்களில் பல்வேறு முற்போக்கு சிந்தனை கருத்தை வசனமாக பேசி நடித்திருப்பார். இவரது வாரிசே பிரபல நடிகர் ராதா ரவி மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் ஆவர்கள்கள். 2 மாதங்களுக்கு முன்பு பாக்யராஜ் பேசிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Read Entire Article