சென்னை யானைகவுனி கல்யாணபுரம் பகுதியில், பிரீத்தனா (எ) ஏஞ்சல் ( வயது 22 ) அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக , கடந்த 2024 ம் ஆண்டு கணவரை பிரிந்து யானை கவுனியில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

தன்னுடன் சேர்ந்து வாழ முடியாதா ?

மனோஜ் அடிக்கடி பிரீத்தனா (எ) ஏஞ்சலிடம் சேர்ந்து வாழ வருமாறு கூறி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரீத்தனா (எ) ஏஞ்சல் கடந்த 06.05.2025 அன்று இரவு சௌகார்பேட்டை , பொம்மிலியார் தெருவில் அவரது உறவினரிடம் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மனோஜ் அவதூறாக பேசி , என்னுடன் சேர்ந்து வாழ வர முடியதா என கேட்டு தகராறு செய்து கத்தியால் பிரீத்தனா (எ) எஞ்சலை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இரத்த காயமடைந்த பிரீத்தனா (எ) ஏஞ்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இது குறித்து C-2 யானைகவுனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

7 குற்ற வழக்குகள்

C-2 யானைகவுனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , வழக்கில் சம்பந்தப்பட்ட மனோஜ் ( வயது 26 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மனோஜ் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலை செய்த வீட்டில் பணத்தை திருடிய பெண் கைது

சென்னை சூளைமேடு பெரியார் பாதை , கன்னியப்பன் தெருவில் வசித்து வரும் சுரேந்தர் ( வயது 40 ) இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 05.05.2025 அன்று பீரோவில் வைத்திருந்த பணத்தை சரி பார்த்த போது ரூ. 45,000/- காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இது குறித்து சுரேந்தர் F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , புகார் தாரரின் வீட்டில் வேலை செய்து வந்த வசந்தி என்பவரை பிடித்து விசாரணை செய்த போது , அவர் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததின் பேரில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வசந்தி ( வயது 49 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.40,000/- மீட்கப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட வசந்தி புகார் தாரர் சுரேந்தரின் உடல் நிலை சரியில்லாத தாயாரை உடனிருந்து கவனித்து கொள்வதற்காக கடந்த மாதம் மேற்படி வீட்டில் வேலைக்கு சேர்ந்து அங்கேயே தங்கி வேலை செய்து வந்ததும் , பீரோவிலிருந்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட வசந்தி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.