தமிழக துணை முதல்வர் உதயநிதியா.? அல்லது உயாநிதியா.? குழப்பத்தில் மதுரை திமுகவினர். - துணை முதல்வர் உயாநிதி என மதுரை முழுவதும் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்

49 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகைக்கு தரும் மாநில சுயாட்சி நாயகரே மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்., துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்பதற்கு பதிலாக உயாநிதி ஸ்டாலின் என அச்சிடப்பட்டு அது மதுரை முழுவதும் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.கவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி மதுரை உத்தங்குடி பகுதியில் நடைபெறும் திமுகவின் பொதுக்குழு கூட்டம் குறித்து பல்வேறு விளம்பர பதாகைகள் பிரசுரங்கள் செய்யப்படுகிறது. இந்த நிலையில்., மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஏகே ஆறுமுகம் என்பவர் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் அடித்த வரவேற்பு போஸ்டரில்., மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் மாநில சுயாட்சி நாயகரே மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்பதுக்கு பதிலாக உயாநிதி ஸ்டாலின் என உள்ளது. அதனை மதுரை முழுவதும் ஒட்டிய போஸ்டர் திமுகவினர் இடையே குழப்பத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது