<h2>இளையராஜா</h2>
<p>நடிகர் ஜீவா நடித்துள்ள அகத்தியா திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் மூடுபனி படத்தில் இளையராஜா இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலின் ரீமிக்ஸ் இடம்பெற்றிருந்தது. அனுமதியின்றி இந்த பாடலை பயன்படுத்தியதாக சாரேகாமா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்திருந்தது. பாடலை பயன்படுத்துவதற்கான அனுமதியை இளையராஜாவிடம் பெற்றதாக வேல்ஸ் ஃபிலிம் தெரிவித்தது. இந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. </p>
<p>என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான உரிமம் சாரேகாமா நிறுவனத்திற்கே சொந்தம் என்றும் அனுமதியின்றி இந்த பாடலை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் 30 லட்சம் ரூபாய் உரிமத் தொகை செலுத்து இந்த பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/astrology/today-horoscope-for-the-12-zodiac-sign-214341" width="631" height="381" scrolling="no"></iframe></p>