கணவன் மனைவிக்குள் பிரச்னை வந்தால் தாய் வீட்டை தேடி செல்லும் பெண்கள் இருந்த காலமும் இன்றும் தொடர்கிறது. ஆனால், சமீபகாலமாக கணவன் மனைவிக்குள் சிறு விரிசல் விழுந்தால் கூட அது விபரீதமாகவே முடியும் செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது. 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் தாண்டி இப்போது ஜென் சி தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருப்பினும் சில அபரீதமான விஷயங்களை கேள்விப்படும்போது யாருமா நீ என ஆச்சர்யப்படுவார்கள். ஆனால் உ.பி.யை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு கிராமத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

காதலனுடன் உல்லாசம்

காதலை விட தகாத உறவால் ஏற்படும் கொலை கொள்ளை போன்ற செய்திகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதையும் தாண்டி ஒரு பெண் யோசித்தது தான் ஆச்சர்யத்தை தருகிறது. உத்தரப்பிரேதச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்திற்கு பின்பு மற்றொரு இளைஞருடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

கணவனுக்கு துரோகம் செய்த மனைவி

இந்த விவகாரம் கணவனுக்கு தெரிந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின்பு அப்பெண்ணை அவர் கண்டித்தும் பலனில்லை. கணவன் கடுமையான வார்த்தைகளால் திட்டினால் உடனே அந்த பெண் தனது காதலனை தேடி சென்று விடுகிறார். இதுபோன்று ஓராண்டில் பத்து முறை காதலனுடன் தலைமறைவான இளம்பெண்ணை போலீசார் உதவியுடன் கணவன் மீட்டு வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் எச்சரித்தும் அப்பெண் கேட்பதாக தெரியவில்லை. இதையடுத்து அப்பெண்ணின் கணவன் ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் புகார் அளித்துள்ளார். அதன் படி அந்த ஊர் பெரியோர் மற்றும் நிர்வாகிகள் அந்த இளம்பெண்ணை அழைத்து விசாரித்துள்ளனர்.

இளம்பெண் விருப்பத்தால் மக்கள் அதிர்ச்சி

ஆனால், ஊரார் முன்பு அப்பெண் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மாதத்தில் 15 நாள் கணவருடனும், மீதி 15 நாள் காதலனுடன் வாழ விரும்புவதாக அப்பெண் தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு 2 பேரும் வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்ததும் ஊர் மக்கள் அடிக்க பாய்ந்தனர். ஆனால், அந்த இளம்பெண் எதற்கும் அஞ்சவில்லை. கணவன் கண்ணீர்ட்டு அழுதும் மனம் இறங்கவில்லை. பின்னர், பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் தனது மனைவியை கள்ளக்காதலுடன் சேர்த்து வைத்து விட்டு கணவன் சோகத்துடன் சென்றுள்ளார்.