இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாகப் பல புதிய மாடல்கள் ஆட்டோமொபைல் சந்தையில் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, டீசல் கார்களுக்கு இணையான ரேஞ்ச் வழங்கும் பிரீமியம் எலக்ட்ரிக் கார்கள் தற்போது விற்பனைக்கு வந்து, வாடிக்கையாளர்களின் சார்ஜ் குறித்த கவலையை முழுமையாகப் போக்கியுள்ளன.

தொழில்நுட்பம், சாஃப்ட்வேர் மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல் வாகனங்களை விடச் சிறந்து விளங்கும் 2 பிரீமியம் எலக்ட்ரிக் கார்களாக டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ (Mercedes-Benz CLA EV) ஆகியவைக் களமிறங்கியுள்ளன.

எதிர்காலத் தொழில்நுட்பம் கொண்ட இந்த கார்களின் சிறப்பம்சங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.

டெஸ்லா மாடல் ஒய்

உலகளாவிய எலக்ட்ரிக் புரட்சிக்கு வித்திட்ட டெஸ்லாவின் மாடல் ஒய், தனித்துவமான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் கேபினில் உள்ள 16 இன்ச் பிரம்மாண்ட டச் ஸ்கிரீன் மூலமாகவே காரின் பெரும்பாலான அம்சங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

இது வெறும் கார் மட்டுமல்ல, கேமிங் உள்ளிட்ட பல ஸ்மார்ட் வசதிகளைக் கொண்ட ஒரு 'சாஃப்ட்வேர்' வாகனமாகும். இதிலுள்ள ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்கள் காரை எப்போதும் புதியதாகவே வைத்திருக்க உதவுகின்றன. இதன் RWD வேரியண்ட், சிங்கிள் சார்ஜில் 500 கி.மீ ரேஞ்ச் தருவது இந்திய சாலைகளுக்கு மிகச் சிறப்பான அம்சமாகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் CLA

சிறந்த ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பைக் கொண்ட பென்ஸ் CLA EV, ரேஞ்ச் விஷயத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இதன் 250+ வேரியண்டில் உள்ள 85.5kWh பேட்டரி சிங்கிள் சார்ஜில் 792 கி.மீ ரேஞ்ச் வழங்குகிறது. இது டீசல் கார்களின் மைலேஜை முறியடிக்கிறது.

இதன்மூலம் வாரக் கணக்கில் சார்ஜ் செய்யாமல் பயணிக்கலாம். இதிலுள்ள 800V அல்ட்ரா-ஃபாஸ்ட் DC சார்ஜிங் மூலம் சில நிமிடங்களிலேயே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கத் தேவையான சார்ஜை ஏற்றிவிட முடியும்.

இந்தக் காரின் கேபின் MB.OS இயங்குதளம் மற்றும் ChatGPT போன்ற AI தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழியில் உள்ள சார்ஜிங் நிலையங்கள் மற்றும் உங்களின் டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப சிறந்த வழியை இந்தக் கார் தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

விலை மற்றும் சிறப்பம்சங்கள்

இந்திய லக்ஸரி சந்தையில் ரூ.50.89 லட்சம் முதல் ரூ.59 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் இந்த இரண்டு கார்களும் மிகச் சிறந்த தேர்வாக உள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போன்ற எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் பற்றிய கவலை இதில் இல்லை.

பூஜ்ஜிய உமிழ்வு, மிகக் குறைந்த இயங்கு செலவு, அதிவேகமாக 0- 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன், சத்தமே இல்லாத கேபின் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு இணையான ரேஞ்ச் என எவ்வித சமரசமுமின்றி பிரீமியம் அனுபவத்தை இந்த வாகனங்கள் வழங்குகின்றன.