பள்ளிக் கல்வித்துறையில் போலி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிலர் பணியாற்றி வருவதாகவும் அவர்களை கண்டறிய 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மைத் தன்மை பெற்று இருக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

திருவாரூர் மாவட்டத்தில் ஊழியர்கள் / ஆசிரியர்கள் சிலர் போலிச் சான்று கொடுத்து வேலையில் அமர்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

உண்மை தன்மை பெறாமல் உள்ள ஆசிரியர்கள்

பள்ளிக் கல்வித் துறையில் ஊழியர்கள் / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 10 - ஆம் வகுப்பு , 12 - ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் கல்விப் பட்டய சான்றுக்கான உண்மை தன்மை பெறாமல் உள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. எனவே , 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மைத் தன்மை பெற்று இருத்தல் அவசியம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2025 -ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உண்மைத் தன்மை பெற்றதை எங்கள் அலுவலகத்திற்கு அறிக்கையாக தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை பள்ளிக் கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலர் பிறப்பித்துள்ளார்.