"எங்களுக்கு போர் வேணாம்" இந்திய, பாகிஸ்தான் தாக்குதலில் சிக்கி தவிக்கும் கிராமங்கள்

7 months ago 9
ARTICLE AD

இந்தியா மீது பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீது இந்தியாவும், மாறி மாறி தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், இந்த தாக்குதலில் சிக்கி காஷ்மீரில் உள்ள கிராமங்கள் சின்னாபின்னம் ஆகியுள்ளது. தங்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள், தங்களுக்கு போர் வேண்டாம் என கூறியுள்ளனர்.

போர் பதற்றத்தில் இந்தியா, பாகிஸ்தான்:

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா அதிரடி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. 9 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர், மான்கோட், கிருஷ்ணா பள்ளத்தாக்கு ஆகிய கிராமங்களில் பயங்கர ஆயுதங்களை கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஜோரி மாவட்டத்திலும் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், லாம், மஞ்சகோட்,  கம்பீர் பிராமின் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பை தேடி கிராமங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சின்னாபின்னமான கிராமங்கள்:

இரு நாடுகளும் நடத்தி வரும் தாக்குதலால் காஷ்மீரில் உள்ள கிராமங்களே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று இரவு பாகிஸ்தான் மோசமான தாக்குதலை நடத்தி இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ரமீஸ் சவுத்ரி, Al Jazeera செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "நேற்று இரவு ஒரு பயங்கரமான இரவாக அமைந்துவிட்டது" என்றார். சந்தக் கிராமத்தை சேர்ந்த அமீன், இதுகுறித்து பேசுகையில், "எல்லைப் பகுதியில் பீரங்கி சண்டைகள் வழக்கமாகிவிட்டன.

"எங்களுக்கு போர் வேண்டாம்"

இரு நாடுகளும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதிலிருந்து துப்பாக்கிச்சூடு ஒப்பீட்டளவில் குறைந்திருந்தது. எல்லை தாண்டிய தாக்குதல்களை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். ஆனால், நேற்று இரவு நடந்த தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருந்தது. ஆரம்பத்தில், இடி என்று நினைத்தோம். அதிகாலை 1 மணிக்கு வானத்தில் இருந்து சத்தம் கேட்க தொடங்கியது. நேற்று முதல் தாக்குதல் விட்டுவிட்டு நடந்து வருகிறது. ஆனால், இப்போது அது நின்றுவிட்டது. நாங்கள் போரை விரும்பவில்லை" என்றார்.

Al Jazeera செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஜாபர் சவுத்ரி பேசுகையில், "பூஞ்சில் உள்ள மக்கள் தங்களை வெளியேற்ற எந்த முயற்சியும் எடுக்காததால் கோபத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இந்திய அரசு எதிர்பார்த்திருக்க வேண்டும். உயிரிழப்புகளைத் தவிர்க்க மக்களை வெளியேற்றியிருக்க வேண்டும்.

காற்றில் பறக்கவிடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம்:

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இது மக்களை கோபப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இரண்டு போரிடும் நாடுகளுக்கு இடையே பிரச்னை வெடிக்கும் போதெல்லாம், இந்த மலைப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் நெருக்கடியை சந்தித்தார்கள்" என்றார்.

கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதையடுத்து, போர் நிறுத்த பகுதி Line of Control (Loc) என மறுபெயரிடப்பட்டது. கடந்த 2003ஆம் ஆண்டில், காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த மோதல் தணியத் தொடங்கியதும். இரு நாடுகளும் அமைதி முயற்சியைத் தொடங்கின. இதையடுத்து, இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டன. கடந்த 2021ஆம் ஆண்டு, இந்த ஒப்பந்தமானது புதுப்பிக்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஒப்பந்தம் தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Read Entire Article