எங்களுக்கு இந்த உரிமையை பெற்றுத்தாருங்கள்... முதல்வர் ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்

6 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: நீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழில் வரும் சூழுல் உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தமிழில் வழக்காடும் உரிமையை பெற்றுதர வேண்டும் என தஞ்சாவூரில் நடந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரனின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:

கழகத்தின் இரண்டு தூண்களாக விளங்கிக் கொண்டிருக்கும் இருவரின் இல்லத்தில் நடைபெறும் திருமணம் இந்த திருமணம். நீதியரசர் புகழேந்தி பேசும் போது உறவின் அடிப்படையில் எங்கள் வீட்டு திருமணம் என்று கூறினார் நான் கூறுகிறேன் உறவின் அடிப்படையில் மட்டுமல்ல, கட்சியின் அடிப்படையில் இது நம் வீட்டு திருமணம். என்னுடைய வீட்டு திருமண என்று சொல்லிக் கொள்ளாமல் எங்கள் கழகத்தின் குடும்பத்தில் நடக்கும் திருமணம் என தெரிவிக்கிறேன்.

இந்த இனிய மணவிழாவை நிகழ்ச்சியை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கிறார்கள். துரை சந்திரசேகரன் ஐந்து முறை திருவையாறு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறவர். மக்களின் செல்வாக்கை பெற்று சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் துரை.சந்திரசேகரன்.

தமிழகத்தில் 1967 -ம் ஆண்டுக்கு முன்பு சீர்திருத்த திருணம் சட்டப்படி செல்லாது. ஆனால் 1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு,  சட்டப்பேரவையில் முதல் தீர்மானமாக  கொண்டு வந்தது சீர்திருத்த திருமணம், சட்டப்படி செல்லும் என்பது தான்.

தமிழில் வழக்காட வேண்டும் என  முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்தார். ஆனால் தற்போது நீதி வழங்கக்கூடிய அந்தத் தீர்ப்பு தமிழில் வரக்கூடிய சூழல் வந்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் கோரிக்கையை நீதிபதிகள் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ள உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அதை நிறைவேற்றித் தர துணை நிற்க வேண்டும்.

நமது தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். பிறக்கும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். மணமக்களை பார்த்து பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என இப்போது  யாரும் கூறுவது இல்லை. காரணம் அதை தவறாக புரிந்து கொண்டு 16 குழந்தைகள் பெறுவது என நினைக்கின்றனர் .

ஆனால், 16 செல்வங்களை பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்பது தான். நாம் குடும்ப கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்தியதால் தான் தமிழ்நாட்டுக்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. தொகுதி மறுவரை தான் அது. அதிக மக்கள் தொகை இருந்தால் நாம் அதிக தொகுதி பெறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Read Entire Article