சென்னை பெருங்குடியில் செயல்படும் தனியார் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை 25 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது.

தனியார் துறையில் உள்ள பிரச்சனை

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எப்போதுமே அதிக நேரம் வேலை செய்ய வேண்டும், எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற புலம்பலை நாம் பார்க்க முடியும். அதுவும் ஒரு சில தனியார் நிறுவனங்களில், நீண்ட நாள் வேலை செய்பவர்களை பணியில் இருந்து, நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருக்கிறது.

இதனாலே இந்தியா போன்ற நாடுகளில், தனியார் துறையை காட்டிலும் அரசு துறையில் வேலை செய்ய பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் ஒரு சில தனியார் நிறுவனங்கள், இதற்கு விதிவிலக்காக இருந்து வருகிறது. குறிப்பாக நீண்ட நாள் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, சமீப காலமாக பல்வேறு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி தனியார் நிறுவனங்கள் கௌரவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் சேர்ந்த நிறுவனம் ஒன்றில், பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கியிருப்பது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.20 லட்சம் மதிப்பு உள்ள கார்

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை பெருங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் தான் நிறுவனத்தில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 20 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளது. நேற்று வரை அந்த கார் யாருக்கெல்லாம் வழங்க உள்ள விவரம் யாருக்கும் தெரியாது, எனவும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார்.

குடும்பத்துடன் வரவழைக்கப்பட்டு கௌரவம்

கார் பரிசாக பெரும் நபர்களின் பெயர் அந்தக் காரின் நம்பர் பிளேட்டிலும், பரிசாக வழங்கிய கார் சாவிலும் எழுதப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தோடு வர வைத்து கார் பரிசாக வழங்கப்பட்டது.

சில வருடங்களாக ஓ.எம்.ஆர் பகுதியில் செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள் இதுபோல் தான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்குவது உண்டு. தற்போது இந்த நிறுவனமும் இந்த வருடத்திலிருந்து கார் பரிசாக ஊழியர்களுக்கு வழங்கியது, ஊழியர்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.