மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி வர்த்த முறைகேட்டிற்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வாதாடிய அமலாக்கத்துறை தரப்பு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டவிரோத நிலக்கரி வர்த்தக முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காக்க முயற்சிப்பதாகவும் இது வெட்கக் கேடானது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்

மேலும், இந்த வழக்கை மாநில போலீசாரோ, சிறப்பு புலனாய்வு குழுவோ விசாரிக்காமல் நேரடியாக சிபிஐ விசாரித்தால்தான், உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

பின்னணி என்ன ?

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த ஜனவரியில் நிலக்கரி முறைகேடு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பு நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது, மாநில காவல்துறையினர் அதிக அளவிலான பேருடன் ஐ – பேர் நிறுவன இயக்குநர் பிரதிக் ஜெயின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மமதா பானர்ஜி, அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றா. மமதா பானர்ஜியின் இந்த செயல்பாடால், சோதனைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் நெருங்கடியையும் அதிர்ச்சியையும் சந்தித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா, என்.வி. அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மமதா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்

விசாரணையின்போது, அமலாக்கத்துறையினர் சோதனைக்கு இடையூறு ஏற்படுத்திய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், மாநில முதல்வர் ஒருவரே இப்படி நடந்துகொள்வது ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைக்கும் செயலாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

மமதா தரப்பு வாதம்

இந்நிலையில், மாநில அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மமதா பானர்ஜியை முடக்க அமலாக்கத்துறையை சிலர் கேடயமாக பயன்படுத்துவதாகவும், அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.