உலகமே அழியுது.. ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ!

1 year ago 7
ARTICLE AD
சமீபத்தில் பெய்த மழையில் பாதிப்புக்கு உள்ளான மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ பேசினார். அப்போது "திமுக எனும் ஆலமரத்தை வெட்ட சிலர் பிளேடுடன் வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளாரே" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, "சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான், வெள்ளத்தில் ஆலமரமே பிடுங்கிக் கொண்டு போயிருக்கிறது, உலகமே அழிந்திருக்கிறது. இதெல்லாம் புதுசா வந்த உதயநிதிக்கு தெரியவில்லை. எத்தனை கூட்டணி பலம் இருந்தாலும் மக்கள் பலம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மக்கள்தான் எஜமானர்கள் அந்த மக்களுக்கு வேலை செய்யாமல் கூட்டணி பலத்தோடு மக்களை போய் சந்தித்தால் ஒன்றும் செய்ய முடியாது"
Read Entire Article