உலகப் புகழ்பெற்ற பூலாம்வலசு சேவல் சண்டை இந்த ஆண்டு நடைபெறவில்லை என காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம் வலசு என்ற கிராமத்தில் நடைபெற்று வந்தது கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவு காரணமாக நடைபெறாமல் இருந்தது.

இந்த ஆண்டு சேவல் சண்டை நடைபெறும் என சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியானது. இந்நிலையில் அரவக்குறிச்சி காவல்துறை சார்பில் சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ளது, தடையை மீறி சேவல் சண்டை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சமூக வலைதளங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரவக்குறிச்சி காவல்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.