’உலக தரத்தில் கல்வி’ புதுச்சேரியில் தொடங்கப்பட்ட JCM மக்கள் மன்றம்..!

3 months ago 4
ARTICLE AD

புதுச்சேரியில் உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு உலக தரத்தில் கல்வி வழங்குவதற்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவே ஒரு அமைப்பு உருவாகப்பட்டுள்ளது.

உருவாகியது JCM மக்கள் மன்றம்

சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள JCM மக்கள் மன்றம் புதுச்சேரியில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு செயல்படும் என்றும் இது முழுக்க, முழுக்க சேவை மனபான்மையோடு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, புதுச்சேரியை பன்னாட்டு அரங்கில் தரம் உயர்த்தி அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கும் எண்ணத்தில் இந்த மக்கள் மன்றத்தை ஜோஸ் சார்லஸ் தொடங்கியுள்ளதாகவும், இதன் மூலம் புதுச்சேரியில் இளைஞர் சக்தியை வைத்து புதிய புரட்சியை உருவாக்க முடியும் என அவர் நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புகளுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் மேரி ஷட்டில் வொர்த் பங்கேற்று பேசினார்.

அரசியல் மாற்றத்தை நோக்கிய நகர்வு

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனாக ஜோஸ் சார்லஸ் புதுச்சேரி அரசியலில் கால் பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுபோன்ற கல்வி மற்றும் சமூக முன்னெடுப்புகள் மூலம் புதுச்சேரி இளைஞர்களை  அவர் கவர்ந்து வருகிறார். புதுச்சேரியை பொறுத்தவரை அதிக அளவில் இளம் வாக்காளர்கள் உள்ள நிலையில், தலைவர்கள் மட்டும் சீனியர்களாகவும் , சூப்பர் சீனியர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டை போல இளைஞர்களை கவரும் இளம் அரசியல் தலைவர் புதுச்சேரி அரசியலில் பெரிதாக யாரும் இல்லை. அப்படியான சூழலில், அந்த இடத்தை இட்டு நிரப்ப ஜோஸ் சார்லஸ் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Read Entire Article