உயிரைக் காக்க போராடிய மருத்துவர்! வைகோ நடை பயணத்தால், ஏற்பட்ட சோகம்: திருச்சியில் பரபரப்பு!

3 months ago 9
ARTICLE AD

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவராக பணியாற்றிவருபவர் சுபாஷ் சங்கரி. இவரது தாயார் நளாயினிக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு இருதய கோளாறு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த இவரை மேல்சிகிச்சைக்காக சென்னை உள்ள மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல சுபாஷ் சங்கரி முடிவு செய்தார். அதற்காக நேற்று அதிகாலை 5 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து தனது தாயாரை காரில் அழைத்துக்கொண்டு திருச்சி விமானமுனையம் நோக்கி புறப்பட்டார்.

வைகோ நடை பயணம்

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னோட்டமாக, சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை இன்று நடைபயணம் மேற்கொள்கிறார்.

இதனால் மாற்றுபாதையில் வாகனங்களை திருப்பிவிட போலீஸார் முன்கூட்டியே திட்டமிடாததால், நோயாளி தாயாரை அழைத்துவந்த சுபாஷ் சங்கரியின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. தாயாரின் மூச்சுத் திணறல் அவருக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியது. தடுப்புகளை அகற்றிவிட்டு தனது காரினை விமானநிலையத்திற்குள்ளே அனுமதியுங்கள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நாங்கள் வந்துவிட்டோம்.

கண்ணீருடன் வாகன நெரிசலை சரி செய்த மருத்துவர்

இனியும் தாமதித்தால் விமானமும் புறப்பட்டு சென்றுவிடும். எனது தாயாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என கூறி போக்குவரத்து போலீஸாரிடம் கண்ணீர்விட்டு கதறினார்.

அதனால் தடுப்புகளை அகற்றி வாகனங்களை அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். ஒருவழியாக காலை 10 மணிக்கு சாலை தடுப்புகளை அற்றி வாகனபோக்குவரத்துக்கு போலீஸார் அனுமதித்தனர்.

வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த தனது காரினை விமான நிலையத்திற்குள்ளே கொண்டு செல்ல சுபாஷ் சங்கரி சாலையில் குறுக்கே பதற்றத்துடன் ஓடிக்கொண்டு, வாகன நெரிசலை கண்ணீருடன் சரிசெய்தார்.

பின்னர் திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடம் தனது நிலையை எடுத்துக்கூறி, தனது தாயாரை விமானத்திற்குள்ளே அழைத்துச் சென்றார். தாயாரை காப்பாற்றும் முயற்சியில், கண்ணீரோடு துடித்த, ஒரு மகளின் போராட்டத்தை, அங்கிருந்தவர்கள் செய்வதறியாது வேதனையுடன் வேடிக்கை பார்த்தனர்.

Read Entire Article