உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..

1 week ago 2
ARTICLE AD

முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. சிஎம்ஆர்எல்-எக்ஸலாஜிக் நிதிப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் வாடகை வீடு, கண்ணூரில் உள்ள அவரது வீடு மற்றும் சிஎம்ஆர்எல் அலுவலகம் உட்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு, வழங்கப்படாத சேவைகளுக்காக சிஎம்ஆர்எல் நிறுவனம் பெரும் தொகையை வழங்கியதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வருமான வரி தீர்வு வாரியத்தின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த வழக்கு குறித்த விசாரணையைத் தொடங்கியது.

கருமணல் அகழ்வு மூலம் சட்டவிரோதமாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் சிஎம்ஆர்எல் நிறுவனம், தங்களது நடவடிக்கைகளுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக கேரளாவில் உள்ள அரசியல் தலைவர்களுக்குப் பணம் கொடுத்திருந்தது. பினராயி விஜயன்தான் அதிகப் பணம் கொடுத்தவர் என்று வருமான வரித்துறைக்கு தகவல் தெரிந்துள்ளது. மேலும், பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தும் எக்ஸாலாஜிக் என்ற நிறுவனத்திற்கு மாதந்தோறும் ரூ.1.72 கோடி வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஜனவரியில், வருமான வரித்துறை சிஎம்ஆர்எல் நிறுவனத்தில் சோதனை நடத்தியபோது, ரூ. 132.82 கோடி மதிப்பிலான முறைகேடுகளைக் கண்டறிந்தது. இதில், ரூ 1.72 கோடி வீணா விஜயன் மற்றும் எக்ஸலாஜிக் நிறுவனத்தின் கணக்குகளில் செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிஎம்ஆர்எல் மாதத் தவணை வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடருமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. மேலும்உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிஎம்ஆர்எல் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சரும் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வீணா விஜயனின் வாக்குமூலம் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் பினராயி விஜயனின் வாக்குமூலமும் பதிவு செய்யப்படும் என்று அமலாக்கதுறை தரப்பில் தெரிவிக்கபபட்டு உள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையை தடைவிதிக்க கோரி கரிமானல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசிதரன், அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கே.எஸ். சுரேஷ் குமார், ஊழியர்களான அஞ்சு ரேச்சல் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுத்தாக்கல் செய்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் கூறியதாவது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு எந்தக் குற்றங்களும் இல்லை என்றும், விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) தற்போது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரித்து வருவதால் மற்ற அமைப்புகள் விசாரிக்க முடியாது என்றும் வாதிட்டனர். இருப்பினும் உயர் நீதிமன்றம் இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு விசாரணையைத் தொடர அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. ஆனால் கரிமானல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு ஒரு வார கால அவகாசம் கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

Read Entire Article