உத்தமபாளையம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை சாலைமலைக்கரடு பகுதியில் உள்ள ரவி என்ற விவசாயி தனது நிலத்தை உழுது கொண்டிருந்தபோது, பழமையான, முதுமக்கள் தாழியின் உடைந்த மண்கலன்கள் கிடைத்து அதன் பின் இதுகுறித்து கோம்பை சமூக ஆர்வலர் பிரகாஷ் கொடுத்த தகவலின்பேரில், உத்தமபாளையம் முன்னாள் பேராசிரியர் வர்கீஸ் ஜெயராஜ், ஆசிரியர்கள் முத்தழகு, பாஸ்கரன், நாகராஜ், குமரேசன் ஆகியோர் அங்கு சென்று, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி சிதைந்தபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: சிக்கிய 3 சிறுவர்கள்! ஆந்திராவில் அதிர்ச்சி

இதுகுறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுகையில், “இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் இறந்தவுடன், அவர்களை அடக்கம் செய்ய மிகப்பெரிய முதுமக்கள் தாழி மற்றும் மண்கலன்களை பயன்படுத்தியுள்ளனர். இவர்களை பெருங்கற்கால மக்கள் என அழைக்கப்படும் கோம்பை சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான ஊராகும். இதன் மேற்குப்பகுதியில் சாலைமலைக்கரடு என அழைக்கப்படும். இவை அனைத்தும் முதுமக்கள் தாழி, மண்கலன்கள், பலகை கற்கள் மற்றும் ஈம மண்கலன்கள் மற்றும் முதுமக்கள் தாழியின் கழுத்துப்பகுதியில் கயிறு போலவும், நெல் மணி போலவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

TTF vasan: மீண்டும் ஒரு சர்ச்சை? திருப்பதி கோயிலில் வேடிக்கை! வசமாக சிக்கும் டிடிஎஃப் வாசன்? என்ன நடந்தது?

இந்த அலங்காரங்கள் தாழிகளை சுடுவதற்கு முன்பு செய்யப்பட்டுள்ளது. தாழிகளில் இறந்தவர்களின் தேவைக்காக, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்படும். இதன்படி, இங்கு கிடைத்த முதுமக்கள் தாழியில் ஈம மண்கலன்களான தட்டு, தண்ணீர் கிண்ணம், குவளை, மண்கிண்ணம் ஆகியவை உடையாமல் கிடைத்துள்ளன. இவற்றில் 14 செ.மீ, உயரமுடைய சிறிய கலயமும் கிடைத்துள்ளது.

Naam Tamilar Katchi : ”தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்துள்ள நாம் தமிழர்” புதிய வரலாறு படைக்கும் சீமான்..!

இம்மண்கலன்கள் உடல் அகன்றும், வாய், அடிப்பகுதி குறுகிய வடிவிலும் காட்சி தருகிறது. மண்கலன்கள் அனைத்தும் வெளிப்புறம் சிவப்பாகவும், உட்புறம் கருப்பாகவும் உள்ளது. மண்கலன்கள் சுடுவதற்கு முன் காவி அல்லது சிவப்பு நிறம் பூசப்படுவதால் வழுவழுப்பான தோற்றமுடையதாக உள்ளது. இங்கு கிடைக்கும் பொருட்களை வைத்து பார்க்கும்போது, இங்கு மனிதன் நாகரீகம், பண்பாட்டுடன் வாழ்ந்தது தெரிய வருகிறது. இங்கு தொல்பொருள் ஆராய்ச்சி செய்தால் இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.