உதயநிதி படத்தால் விழுப்புரம் நகர மன்றத்தில் வெடித்த வாக்குவாதம்: அகற்ற மறுத்த தலைவி!

4 months ago 8
ARTICLE AD

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் நகரமன்ற தலைவர் இருக்கையின் மேசையின் மீது வைக்கபட்டிருந்த முன்னாள் துனை முதல்வர் உதயநிதி புகைப்படத்தினை அகற்றக்கோரி அதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் சல்சலப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நகரமன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் மாதாந்திர சாதாரணக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஆரம்பமே அதிரடி.. அடுக்கடுக்கான புகார்கள்!

கூட்டம் தொடங்கிய உடனே, நகராட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து உறுப்பினர்கள் ஆக்ரோஷமாகப் புகார்களை அடுக்கத் தொடங்கினர். நகரத்தின் பல்வேறு முக்கியச் சாலைகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு நகராட்சி நிர்வாகம் இன்னும் நிரந்தரத் தீர்வு காணவில்லை, குப்பைக் கிடங்குகளில் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன, சுகாதாரச் சீர்கேடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது எனப் பல்வேறு வார்டு பிரச்சினைகளைக் முன்வைத்து காரசாரமாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்.

பற்றிக்கொண்ட புகைப்படம் விவகாரம்!

பிரச்சினைகள் ஒருபுறம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, திடீரென அனைவரின் கவனமும் நகரமன்றத் தலைவரின் இருக்கை நோக்கித் திரும்பியது. தலைவியின் இருக்கைக்கு முன்பாக உள்ள மேஜையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. (அதேநேரம், தலைவி இருக்கையின் பின்புறச் சுவரில் தற்போதைய தமிழக முதல்வர் விஜய்யின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது).

இதனைக் கவனித்த அதிமுக நகரமன்ற உறுப்பினர் கலை மற்றும் காங்கிரஸ் நகரமன்ற உறுப்பினர் சுரேஷ் ராம் ஆகியோர் சட்டென எழுந்து, மிகக் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பினர்:

"நகரமன்றக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் இடம்பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், முன்னாள் துணை முதல்வராக இருந்த உதயநிதியின் புகைப்படத்தை ஏன் இங்கு வைத்துள்ளீர்கள்? அதை உடனடியாக மேஜையிலிருந்து அகற்ற வேண்டும்!" என்று ஆக்ரோஷமாகக் குரல் எழுப்பினர்.

திமுக - அதிமுக நேரடி மோதல்!

இதைக் கேட்டுப் பாய்ந்த திமுக நகரமன்ற உறுப்பினர் மணவாளன், அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்தார்:

"இந்தப் புகைப்படங்கள் ஒன்றும் அரசு அலுவலகக் கட்டிடச் சுவரில் நிரந்தரமாகத் தொங்கவிடப்படவில்லை! நகரமன்றத் தலைவரின் தனிப்பட்ட இருக்கைக்கு முன்புள்ள மேஜையில்தான் வைக்கப்பட்டுள்ளது. அதை உங்களால் அகற்றச் சொல்ல முடியாது, அகற்றவும் மாட்டோம்!" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இதனால் இருதரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியது. "அகற்று!", "அகற்ற முடியாது!" என இருகட்சி உறுப்பினர்களும் நேருக்கு நேர் நின்று காரசாரமாக வாதிட்டதால் கூட்ட அரங்கமே அதிரத் தொடங்கியது. பெரும் சலசலப்பும், கூச்சலும் நிலவியதால் கூட்டத்தில் பதற்றமான சூழல் உருவானது.

தலைவியின் இறுதிப் பஞ்ச்: அடங்கிய சலசலப்பு!

வார்த்தை முட்டல்கள் எல்லை மீறிச் சென்றுகொண்டிருந்த வேளையில், நகரமன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு நேரடியாகக் களத்தில் இறங்கி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் மிகத் துணிச்சலாக,

"மேஜையில் இருக்கும் புகைப்படங்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்படாது! உங்களுக்கு இதில் இவ்வளவு உடன்பாடில்லை என்றால், நீங்கள் உங்கள் விருப்பப்படி உங்கள் அதிமுக கட்சித் தலைவரின் புகைப்படத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு வந்து உங்கள் மேஜையில் வைத்துக் கொள்ளுங்கள்!" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

நகரமன்றத் தலைவியின் இந்த அதிரடிப் பதிலடியைக் கேட்டு அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேற்கொண்டு பேச முடியாமல் திகைத்துப் போயினர். இதையடுத்து, நீண்ட நேரமாக நீடித்த சலசலப்பு ஒருவழியாக ஓய்ந்து அமைதியானது. இதனைத் தொடர்ந்து, பெரும் பரபரப்பு மற்றும் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியிலேயே விழுப்புரம் நகராட்சி மன்றக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது.

Read Entire Article