உடனடியாக சீல்! திருச்சியில் உரிமம் இல்லாமல் டாஸ்மாக் பார்-ஆ? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

1 year ago 8
ARTICLE AD

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் பள்ளிகல்வி துறை சார்பாக போதைப்பொருள் எதிர்ப்புக்குழு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல்துறை ஆணையம் காமினி, மாவட்ட கல்விதுறை அலுவலர்கள், உணவு பாதுக்காப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

போதை பொருளை ஒழிக்கும் வரை அதிரடி சோதனை தொடரும்

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே போதைப்பொருள் எதிர்ப்பு குழு அமைக்கபட்டுள்ளது. அவர்களுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் பள்ளி மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்களது பள்ளியில் நடைபெறக்கூடிய தவறுகள் மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களைப் பற்றியும் தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

போதைப் பொருளால் ஏற்படும் தீமைகளைப் பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிகழ்வு நடைபெற்றது. மேலும் திருச்சி மாவட்டத்தில் நடைபெறக்கூடிய தவறான செயல்களை குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுப்பதற்காக இலவச தொலைபேசி எண் மற்றும் வாட்ஸப் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இடையே இருந்து புகார்கள் வரும் பட்சத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் வரை தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடைபெறும்.

புகார்கள் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றிய விவரங்களை யாரும் கேட்க மாட்டார்கள். புகாரை மட்டும் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் தினந்தோறும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திருச்சியில் டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

அதில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கையும், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மெத்தனால் யாருக்கும் விற்பனை செய்யப்படவில்லை. மதுபான கடைகள் அரசு விதித்துள்ள நேரங்களை தாண்டி மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது கள்ள சந்தையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுபான கடைகளில் இரவு , அதிகாலையில் மதுபானம் விற்பனை செய்வதாக புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மதுபான கடைகளில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும். தவறுகள் நடந்திருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் மதுபான கூடம் இயங்கினால் உடனடியாக சீல் வைக்கப்படும்.

Read Entire Article