உசிலம்பட்டி அருகே மலை அடிவாரத்தில் பொங்கல் வைக்க சென்ற இடத்தில் கதம்ப வண்டு தாக்கியதில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி அருகே புரட்டாசி பொங்கல் திருவிழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொண்டிக்குண்டு கிராமத்தில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது, இந்த திருவிழாவிற்கு முன்பாக கிராமத்தின் அருகில் மலை அடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோவிலில் பொங்கல் வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இன்று மாலை இந்த கன்னிமார் கோவிலில் பொங்கல் வைக்க சென்றிருந்த போது பொங்கல் வைத்த புகையின் காரணமாக அப்பகுதியில் இருந்த கதம்ப வண்டு வெளியேறு அங்கு இருந்தவர்களை விரட்டி விரட்டி தாக்கியது.

சுமார் 25 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இதில் சுமார் 25 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த பெருமாள், கருப்பன், சக்கரையம்மாள், அஸ்வினி உள்ளிட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்., இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.