உங்களை கோடீஸ்வரனாக்கும் அந்த "6" மணி நேரம்!

அன்பார்ந்த abp நாடு வாசகர்களே வாழ்க்கையில் எல்லோருக்குமே பணம் சம்பாதிக்க வேண்டும்... நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதற்கான வழிகளையும் உழைப்பையும் நாம் தேடிக் கொண்டிருப்போம்...

40 வயதை கடந்த பின்பாக வாழ்க்கை ஓட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் காலம் குறுகியதாக இருக்கிறது குடும்பத்திற்கு என்று எதையாவது சேர்க்க வேண்டும் என்று நம்மில் பலர் போராடிக் கொண்டிருப்போம்... இப்படியான உங்களின் எண்ணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு எளிய பரிகாரத்தை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.... ஒவ்வொரு மாதத்திலும் உங்களுடைய பிறந்த நட்சத்திரம் வரும் அதுதான் உங்களை வாழ்க்கையும் உயரத்திற்கு கொண்டு போகும் ஒரு ஏணி... நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்களோ அந்த நட்சத்திரம் கோள்சாரத்தில் வானத்தில் வரும் பொழுது உங்களுடைய எண்ணத்தை ஈடேற்றும் சக்தியை கொடுக்கிறது... தெளிவாக புரியும் படி சொல்லுகிறேன் வருகின்ற மாதத்தில் ஆள்காட்டியில் உங்களுடைய சொந்த நட்சத்திரம் வரும் தினத்தில் நீங்கள் உங்களுடைய இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று மனதார பொருளாதார உயர்வு வேண்டி வணங்குங்கள்...

கோடீஸ்வரனாக்கும் அந்த ஆறு மணி நேரம் :

நான் மேலே சொன்னது போல சொந்த நட்சத்திரத்தன்று கோவிலுக்கு சென்று வழிபடுவது சாதாரணமாக அனைவரும் சொல்லும் ஒரு எளிய பரிகாரமாக இருக்கலாம் ஆனால் உங்களுடைய நட்சத்திரம் பாதம் எது என்பதை உங்களுடைய ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உதாரணத்திற்கு நீங்கள் அஸ்வினி ஒன்றாம் பாதமாக இருந்தால் வானத்தில் வரக்கூடிய அஸ்வினி நட்சத்திர தினத்தன்று நட்சத்திர நாழிகை ஆரம்பித்து ஆறு மணி நேரம் ஒரு பாதத்தில் வானத்தில் சந்திரன் அடக்கும்பொழுது அந்த ஒன்றாம் பாதம் 6 மணி நேரமும் உங்களுக்கான சக்தி மிகுந்த நேரம்... நாள்காட்டி நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நட்சத்திரம் ஆரம்பிக்கும் நேரம் என்று போடப்பட்டிருக்கும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நட்சத்திரம் அஸ்வினி ஆரம்பம் ஆகிறது என்றால் பத்து மணியிலிருந்து முதல் 6 மணி நேரம் அஸ்வினி ஒன்றாம் பாதத்தில் சந்திரன் சென்று கொண்டிருக்கும் அடுத்த ஆறு மணி நேரத்தில் அஸ்வினி இரண்டாம் பாதத்தில் சந்திரன் சென்று கொண்டிருக்கும் அடுத்த ஆறு மணி நேரத்தில் அஸ்வினி மூன்றாம் பாதத்தில் சந்திரன் சென்று கொண்டிருக்கும் இப்படியாக நீங்கள் எந்த பாதம் என்பதை கழுத்தில் கொண்டு அந்த வாரத்தில் சந்திரன் செல்லுகின்ற நேரத்தை குறித்து வைத்து அப்பொழுது வீட்டிலேயே பூஜை அறையில் மனதாரப் பிரார்த்தித்தாலும் சரி கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் சரி முழுவதுமாக உங்களுடைய சிந்தனையை பக்தியில் செலுத்துங்கள் வரத்தைக் கேளுங்கள் தாராளமாக உங்களுக்கு கிடைக்கும்...

இதெல்லாம் மூடநம்பிக்கை அல்லது இப்படி அனைவரும் சென்று பிரார்த்தித்தால் அவர்களுக்கு கேட்டது கிடைத்துவிடும் அல்லவா என்று சிந்திக்கலாம்... ஆனால் இந்த பதிவை பார்க்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் உங்களுக்கு தற்பொழுது இந்த ஆறு மணி நேரம் குறித்து தெரிய வந்திருக்கிறது இயற்கையை உங்களுக்கு கொடுத்திருக்கிறது உங்களுடைய நட்சத்திரம் எந்த தினத்தில் வருகிறது என்பதைக் குறித்துக் கொண்டு உங்களுடைய ஜாதகத்தை பார்த்து நீங்கள் எத்தனை நீங்கள் என்ன பாதம் என்பதை கண்டுபிடித்து அந்த நாளில் எந்த ஆறு மணி நேரத்தில் உங்கள் பாதம் மேல் சந்திரன் செல்லுகிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்….