உங்க வீட்டு பிள்ளைகளிடம் கலைத்திறமை இருக்கா? - இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு!

1 month ago 4
ARTICLE AD

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் சவகர் சிறுவர் மன்றம் சார்பில், 5 முதல் 16 வயது வரையிலான சிறார்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப் பயிற்சிகள் அளித்து வருகிறது. சிறார்களிடையே மறைந்து கிடக்கும் ஆக்கப்பூர்வமான கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், மற்றும் கிராமிய நடனம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில் 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் சிறார்கள் மாநில அளவிலான கலைப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அவ்வகையில் முதற்கட்டமாக 5-8, 9-12, 13-16 ஆகிய மூன்று வகைப் பிரிவில் விழுப்புரம் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 08.03.2026 அன்று குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. கலைப் போட்டிகள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் (நகராட்சி விளையாட்டுத் திடல் வளாகம்) காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

இக்கலைப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 08.03.2026 அன்று காலை 9.00 மணிக்குள் வரவேண்டும். காலதாமதமாக வருபவர்கள் போட்டியில் கலந்து கொள்ள இயலாது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளின் பெயர், வயது, ஆதார் அட்டை நகல், பிறந்த தேதி வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் (Birth Certificate) வயதுச் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும், மாவட்டக் கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

குரலிசை: கர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சிப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை திரைப்படப்பாடல்கள், பிற மொழிப் பாடல்கள், குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படும்.

பரதநாட்டியம்: பரதநாட்டியம் குச்சுப்புடி, மோகினி ஆட்டம், போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும், திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. பென்டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். குறைந்தப்பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

ஓவியம்: 40x30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சீல், கிரையான், வண்ணங்கள், போஸ்டர்கலர், வாட்டர் கலர், ஆயில் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைககள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது பிரிவுக்கும் தனித் தனியாக தலைப்புகள், போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும்.

கிராமிய நடனங்கள்: தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பென் டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியாளர்களே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். குறைந்தப்பட்சம் 3 நிமிடம், அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 04362 232252, 9965044482, என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Read Entire Article