<p>ஈஷா குற்ற வழக்குகள் மீதான விசாரணை குறித்த உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை எதிர்த்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்.3) மேல் முறையீடு செய்துள்ளார். மூத்த வழக்கறிஞ்சர் முகுல் ரோகத்கி, இன்றே இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>கோவை ஈஷா யோகா மையம் மீதான குற்ற வழக்குகள் குறித்து விசாரித்து அக்டோபர் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.</p>