மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவின் இரண்டு முக்கியமான LPG சரக்குக் கப்பல்கள் (BW Tyr மற்றும் BW Elm) பயணத்தைத் தொடங்கியுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தக் கப்பல்கள் எங்கே செல்கின்றன என்ற விவரங்களை ரகசியமாக வைத்துள்ளன.

இரண்டு வாரக் காத்திருப்புக்குப் பின் அனுமதி!

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முக்கியமான கடல் பகுதியில், இந்தக் கப்பல்கள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடுக்கடலில் காத்திருந்தன. ஈரானிய அதிகாரிகளிடம் இருந்து 'Safe Passage' எனப்படும் பாதுகாப்பான பயண அனுமதி கிடைத்த பிறகே, தற்போது இவை நகரத் தொடங்கியுள்ளன. இதுவரை மொத்தம் 6 கப்பல்கள் இதேபோல் அனுமதி பெற்றுள்ளன. ஏற்கனவே 4 இந்தியக் கப்பல்கள் பத்திரமாக இந்தியவிற்கு வந்தடைந்துவிட்டன.

🚨 BIG BREAKING :

Two Other Indian LPG ships BW Tyr & BW Elm are crossing the Strait of Hormuz with 93,000 tonnes of gas🔥

📍Mumbai & New Mangaluru.

— Sunil Gurjar, CFTe (@sunilgurjar01) March 28, 2026

போர் பதற்றமும் மோடியின் தலையீடும்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலுக்குப் பதிலடியாக, ஈரான் இந்தப் பாதையில் செல்லும் கப்பல்களைக் குறிவைத்து வருகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் 20% இந்தப் பாதை வழியாகத்தான் நடக்கிறது என்பதால் ஒட்டுமொத்த உலகமும் அச்சத்தில் உள்ளது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளார். "உலக நாடுகளின் எரிசக்தித் தேவைக்காக இந்த கடல் வழி எப்போதும் திறந்திருக்க வேண்டும்" என்று மோடி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா போட்ட 'மாஸ்டர் பிளான்'!

இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் 60% இறக்குமதியையே நம்பியுள்ளது. ஒருவேளை போர் காரணமாகத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதைச் சமாளிக்க, பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, உள்நாட்டிலேயே LPG உற்பத்தியை 50% வரை இந்தியா அதிரடியாக அதிகரித்துள்ளது.