சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தன்னார்வமாக பங்களித்து வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" எனும் பாராட்டு விருதை வழங்கி கௌரவித்தது வருகிறது. அந்த வகையில் 2025 -ஆம் ஆண்டிற்கான இவ்விருது, வருகிற ஆகஸ்ட் 15 -ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

விருதுடன் ஒரு லட்சம் ரூபாய்

இந்த விருது, சமூக சேவைகளில் தலைசிறந்த சாதனைகளை புரிந்த 15 வயது முதல் 35 வயது வரையிலான 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை விருதுடன் வழங்கப்படும்.

விருது வழங்குவதன் நோக்கி

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்படுவதற்கான நோக்கங்கள் பல. இளைய தலைமுறையில் சமூக பொறுப்புணர்வை ஊட்டுவதுடன், அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்குவதை வலியுறுத்துகிறது. இளம் தலைமுறையை சமூகத் தொண்டுகளுக்கு ஊக்குவிப்பது, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து எதிர்கால தலைவர்களாக உருவாக்குவது என்பனவும் முக்கிய குறிக்கோள்களாக உள்ளன.

CMBT TN Govt: கோயம்பேட்டில் வரப்போவது என்ன? குத்தம்பாக்கம் ரெடி - புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது?

விருதிற்கான தகுதிகள்

விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண்/பெண் இளைஞர்கள், 01.04.2024 அன்று குறைந்தது 15 வயதையும், 31.03.2025 அன்று அதிகபட்சம் 35 வயதையும் உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் (சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்).

2024-2025 ஆம் நிதியாண்டில் (01.04.2024 முதல் 31.03.2025 வரை) மேற்கொள்ளப்பட்ட சமூக சேவைகள் மட்டுமே பரிசீலனைக்குட்படுகின்றன. இந்தச் சேவைகள் தனிநபரின் தன்னார்வச் செயற்பாடுகளாகவும், சமூகத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள். மேல் விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள், தாங்கள் வசிக்கும் சமூகத்தில் நல்ல மதிப்பை பெற்றவர்கள், சமூக நலனுக்காக தொண்டு செய்தவர்களாக இருக்க வேண்டும்.

Tahawwur Rana: ”தொட்டவன விட்டதா இல்லை” தஹாவூர் ராணாவை தட்டி தூக்கிய இந்தியா - மும்பை தாக்குதல் விவகாரம்

விண்ணப்பிக்கும் முறை

விருதுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2025, மாலை 4.00 மணி வரை. மேலும், விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்தவாறும், விண்ணப்பத்தின் மூன்று நகல்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்களுக்கான வாய்ப்பு

இம்முறையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், தாங்கள் மேற்கொண்ட சமூக சேவைகளை ஆதாரங்களுடன் விவரித்து, விருதுக்காக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொலைபேசி எண்: 7401703459 என்ற எண்ணில் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கும் இந்த விருது, அவர்களின் செயல்களில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி, சமூகத்தில் நேர்மையும், நல்லிணக்கமும் விரிவடையக் காரணமாகும் என்பதில் சந்தேகமில்லை. எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.