இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லவை நடக்குமா? ஜோதிட நிபுணரின் விளக்கம்!

1 year ago 7
ARTICLE AD

அன்பார்ந்த abp நாடு வாசகர்களே  கனவுகளைப் பற்றி விளக்க வேண்டும் என்றால் அது  மருத்துவராலேயே சரியாக முடியாது.  கனவுகள் ஆழ்மனதின் எண்ணங்கள்.  ஒரு கனவு வருகிறது என்றால்  அந்தக் கனவில் இடத்தையோ பொருளையோ  நபர்களையும் நம்மால் தீர்மானம் செய்ய முடியாது  நம் எண்ணங்கள் தான் அவற்றைத் தீர்மானம் செய்ய வேண்டும்.

ஒரு கனவின் இடத்தை எண்ணங்கள் எப்படி  முடிவு செய்கின்றன என்பதை அறிஞர்களாலோ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க முடியாது. சரி முன்னோர்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி ஆராயலாம்.  முன்னோர்கள் யார்  ரத்த சொந்தம்.  முன்னோர்களின் விதைகள் தான் நாம்.  ஆனால் உங்களுடைய தாத்தாவுக்கு பாட்டிக்கோ அல்லது முன்னோர்களுக்கு  தனிப்பட்ட மூளை செயல்பாடுகள் இருக்கும் அவர்கள் உங்கள் ரத்த சொந்தமாக இருக்கலாம் ஆனால்  யோசிக்கின்ற விதம் என்பது நிச்சயமாக வெவ்வேறாக மட்டுமே இருக்கும்

ஆபத்து வருவதை முன்கூட்டியே உணர்த்தும் கனவு:

உங்களுக்கு ஏதேனும் ஆபத்து வரப்போகிறது என்று வைத்துக் கொண்டால் ஒரு விதமான அதிர்வுகளால் நீங்கள் ஏற்கனவே பிடிக்கப்பட்டு இருப்பீர்கள்.  அந்த அதிர்வுகளை உங்களால் உணர முடியாது. ஆனால், சித்தர்களும் ரிஷிகளும் உங்களுக்கு கெட்ட நேரம் வருகிறது என்பதை அவர்களால் உணர முடியும். உங்கள் உடம்பிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு விதமான எதிர்மறை ஆற்றல் உங்களுக்கான நேரம் சரியில்லாததை காட்டும்.  நீங்கள் தூங்கும் பொழுது உங்களுடைய அனைத்து எண்ணங்களும்  அமைதியான நிலைக்கு சென்ற பின்பு,  ஆழ் மனது விழித்த்திருக்கும். எதிர்மறையான எண்ணங்களை பொறுத்தவரை ஆழ்மனது எப்படி உங்களுக்கு வெளிப்படுத்த முடியும்? கனவு வாயிலாக தான் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

முன்னோர்கள் கனவில் வருகிறார்களா?

கனவில் முன்னோர்கள் தோன்றி உங்களுக்கு வர இருக்கின்ற பிரச்சனைகளை குறித்து அவர்கள் சொல்ல முயற்சிப்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு சம்பவங்கள் வாயிலாக உங்களுக்கு உணர்த்த முயற்சிப்பார்கள்.  இப்படியான சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொண்டு முன்னோர்கள் உங்களுக்கு கனவில் என்ன கூற வருகிறார்கள் என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டால் ஒழிய நடக்கவிருப்பதை உங்களால் கணிக்க முடியாது.  முன்னோர்கள் கனவில் வரும் போது அவை தீயவை என நடக்கும் அல்லது நல்லவையாக நடக்கும் என்பது இல்லை. எப்படியும் சம்பவங்கள் நடைபெறலாம்.

எனக்குத் தெரிந்த எத்தனையோ நண்பர்கள் கனவின் மூலமாக வருவதை உணர்கிறார்கள்.  கிட்டத்தட்ட அவர்கள் உணர்வதும் வாழ்க்கையில் நடப்பதும் சமமாக தான் இருக்கிறது. சிலருக்கு பிடிக்காத நபர்கள் முன்னோர்களாக கனவில் வரும்போது அவர்களுக்கு எதிர்மறையான சம்பவங்கள் வாழ்வில் நடைபெறலாம் .  உங்களுக்கு பிடித்த முன்னோர்கள் கனவில் வரும் பொழுது வாழ்க்கையில் வசந்த காலம் போல நல்ல சம்பவங்களாக கூட நடைபெறலாம்.  ஆன்மீகப் பாதையில் நீங்கள் செல்லும்போது கனவில் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஒன்றும் உங்களை செய்து விட முடியாது.

நல்ல ஆத்மாக்கள் எப்பொழுதும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.  அப்படிப்பட்ட நல்ல ஆத்மாக்கள் உங்களின் முன்னோர்கள். எனவே கனவில் முன்னோர்கள் வருவதன் மூலம் உங்களுக்கு தீமை ஒருபோதும் நடக்காது என்பதை கணிப்பு.

Read Entire Article