இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி

4 months ago 9
ARTICLE AD

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறு இரட்டைக் கொலையாக மாறிய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், மூவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் (65) என்பவர் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்பகுதியில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த துக்கச் செய்தியை ஆட்டோவில் சென்று அறிவிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக முத்துப்பிள்ளை மண்டபம் அருணா கார்டன் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் அம்மாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த செட்டி என்ற குருமூர்த்தி ஆகியோர், ராமலிங்கத்திடம் மதுபாட்டில்களை வாங்கி வருமாறு கூறியதாக விசாரணையில் தெரியவந்தது. அதன்படி, மதுபாட்டில்களுடன் ஐஸ்வர்யா நகர் பகுதியில் காத்திருந்த ராமலிங்கத்திடம், அதே பகுதியைச் சேர்ந்த அய்யர் என்ற கலியமூர்த்தி (40) எதற்காக மதுபாட்டிலுடன் நிற்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தை முயற்சி விபரீதம்

தகராறின்போது கலியமூர்த்தி, ராமலிங்கத்தை தாக்கியதாகவும், பின்னர் இரவு நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி ராமலிங்கத்தையும், அவரது நண்பர்களையும் ஐஸ்வர்யா நகர் மூர்த்தி தோப்பு பகுதியில் வரவழைத்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அங்கு கருப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42), அவரது உறவினரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த நெப்போலியன் (53) ஆகியோர் இருந்தனர். அப்போது மறைந்திருந்த கலியமூர்த்தி, திடீரென அரிவாளால் குருமூர்த்தியின் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.

தினேஷும் வெட்டிக் கொலை

குருமூர்த்தி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததை பார்த்த தினேஷ் தடுக்க முயன்றபோது, அவரையும் கலியமூர்த்தி அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த தாக்குதலில் குருமூர்த்தி மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு கலியமூர்த்தி, ரமேஷ், நெப்போலியன் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை பெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும், சாட்சியங்களையும் ஆய்வு செய்த நீதிபதி ஜெயஸ்ரீ, குற்றம் சாட்டப்பட்ட கலியமூர்த்தி, ரமேஷ், நெப்போலியன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்மானித்து, ஒவ்வொருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பா. விஜயகுமார் ஆஜராகி வாதாடினார். வழக்கை திறம்பட விசாரித்து நீதிமன்றத்தில் ஆதாரங்களை முறையாக தாக்கல் செய்த அப்போதைய நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ஜெயகவுரி, தற்போதைய காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் நீதிமன்ற காவல் பிரிவு போலீஸ் ஜெயசுதா ஆகியோரை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டினார்.

Read Entire Article