ஊட்டி: சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் ஊட்டிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஊட்டி மலை ரயில்:

தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயில், நீலகிரி மலை இரயில் தான். இந்த இரயில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் வரையிலான மலை இரயில் 123 ஆண்டுகள் பழமையானது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேகங்கள் தவழும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கை சூழலும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும். மலைகள், அடர்ந்த காடுகள் இடையே ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள் என இனிமையான பயணத்தை இந்த இரயில் பயணிகளுக்கு தரும். இதன் காரணமாக இந்த மலை இரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் இடையே, பல் சக்கரம் உதவியுடன் மலைப் பாதையில் நீலகிரி மலை இரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலின் பெட்டிகள் பாதிப்பு இல்லாமல் இருக்க, ‘பிரேக்’ பிடித்து இயக்கப்படுகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை இரயில், 12 மணிக்கு ஊட்டி இரயில் நிலையத்தை சென்றடைகிறது. இதனால் நீலகிரி மலை இரயில் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரியதாக இருந்து வருகிறது.

சிறப்பு ரயில் இயக்கம்:

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்காக, சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஊட்டி குன்னூர் மற்றும் ஊட்டி கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் இயக்கப்படும் எனரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, குன்னூர் முதல் ஊட்டி வரையில் 15, 16 மற்றும் 17ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

ஐந்துபெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு மலை ரயிலில், மொத்தம் உள்ள 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் புறப்படும் ரயில், வகுப்பும், 130 இருக்கைகள் இரண்டாம் வகுப்பில் இருக்கும். குன்னூரில் இருந்து காலை 8.20 புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். மாலை 4.45 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும்ரயில், மாலை 5.55 மணிக்கு மீண்டும் குன்னூர் சென்றடையும்.

இதேபோல், ஊட்டி முதல் கேத்தி யரை யிலான சிறப்பு ரயில் 15 16 மற்றும் 17ம்தேதிகளில் இயக்கப்படவுள்ளது. இந்தரவில் ஊட்டிரயில் நிலையத்தில் இருந்து 3 முறை கேத்திக்கு இயக்கப்படவுள்ளது. காலை 9.45, 11.30 மற்றும் மதியம் 3 ஆகிய நேரங்களில் கேத்திக்கு இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.