தமிழகத்தில் தற்போது பயனற்ற திட்டங்களுக்கு தமிழக வெற்றிக்கழக அரசு செலவு செய்வது நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதற்கு சமமானது எனவும் காலநிலை நீர் ஆதாரம் போன்றவற்றிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கல் இயக்க தலைவர் நல்லசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காவிரி நீரை பாதுகாக்க வேண்டும் குறித்த கூட்டத்தில் பங்கேற்ற கல் இயக்க தலைவர் நல்லுசாமி சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள லட்சுமி அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

காவிரி பிரச்சனை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் பிற மாநிலக் கட்சிகள் என யாருக்கும் போதிய அக்கறை இல்லை என குற்றம் சாட்டினார். பொருளாதார மற்றும் காலநிலை அச்சுறுத்தல் உலக அளவில் ஏற்படக்கூடிய எல் நினோ மாற்றம் மற்றும் வெப்ப அலையின் காரணமாக கடுமையான வறட்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரம் மேலும் பாதிப்படைந்து, நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை மோசமடையும் என்று எச்சரிக்கப்பட்டது.

1996-ல் மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயிகள் சார்பில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டதை நினைவுகூர்ந்த அவர், இடைத்தேர்தல் செலவுகளைப் பொறுப்பேற்பது மற்றும் ஒரே நேரத்தில் பல தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுப்பது போன்ற கடுமையான தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கோடை காலத்தில் தேவையின்றி தண்ணீரைத் திறந்து விடுவதால், பாசனத்திற்கான நீர் இருப்பு குறைகிறது. சில ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் ஆதாயத்திற்காகவே அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் இதுபோன்ற முறைகேடான நீர் திறப்புக்கு வழிவகுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இயற்கை சீற்றங்கள் மற்றும் நீர் மேலாண்மையின் சீர்கேடுகளிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற அரசு உடனடியாக சிக்கன நடவடிக்கை மற்றும் முறையான நீர் பங்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

நீர் மேலாண்மையை சரியாக கடை பிடிக்காவிட்டால் வரும் காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை மக்கள் சந்திப்பார்கள் எனவும் அரசு நிர்வாகத்தினர் முறையாக காவிரி நீர் மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.