சென்னையை சேர்ந்த அகிலா தனியார் அழகு கலை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தோழிகளுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இதேபோல் திண்டுக்கல் நத்தம் புதூர் பகுதியை சேர்ந்த மருதப்புலி மகன் ராஜ்குமார் சென்னையில் வசித்து வந்துள்ளார். ராஜ்குமாருக்கும், அகிலாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து அகிலாவும் ராஜ்குமாரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து சென்னையில் 6 மாத காலமாக தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் அகிலாவுடன் இன்ஸ்டாகிராமில் பழகியது போல் பல பெண்களுடன் பல ஐடிகள் உருவாக்கி இன்ஸ்டாகிராமில் பெண்களுடன் பேசி வந்தது அகிலாவுக்கு தெரியவந்துள்ளது.

Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!

இதுகுறித்து அகிலா ராஜ்குமாரிடம் கேட்டபோது இருவருக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை காரணமாக ராஜ்குமார் அகிலாவை அடித்து விட்டு திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். இதனை அடுத்து அகிலாவும் அவரைத் தேடி கடந்த ஒன்பதாம் தேதி திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். ராஜ்குமார் வீட்டிற்கு செல்லும் போது அவரது தந்தை சில நபர்களுடன் தன்னை துரத்தியதாகவும் இதனால் 181 என்ற சமூக நலத்துறை எண்ணிற்கு கால் செய்ததன் மூலம் அவர்கள் அகிலாவை மீட்டு திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மையத்தில் தங்க வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதில் அகிலவை திருமணம் செய்து கொள்ள முடியாது என ராஜ்குமார் தெரிவித்ததை அடுத்து அகிலா ராஜ்குமார் மீது திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் புகாரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...

அங்கு அகிலா சென்றபோது சம்பவம் நடைபெற்ற சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அகிலா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் பிரிவு மையத்தில் இருந்து சாணார்பட்டியை சேர்ந்த பெண் காவலர் உதவியுடன் சென்னைக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அகிலா கூறும்போது, என்னைப்போல் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று சம்பவம் வேறு பெண்களுக்கு நடைபெறக் கூடாது. ராஜ்குமார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி

இதுகுறித்து புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் சிபில் சௌந்தர்யன் கூறும்போது, "சமூக நலன் மகளிர் பிரிவில் இருந்து புகார் வந்துள்ளது. மேலும், அகிலா தரப்பில் எழுத்து பூர்வமாக புகார் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார். இதேபோல் சென்னையைச் சேர்ந்த சிவதுர்கா என்ற பெண் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மீது புகார் அளித்து புகாரின் பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.