Today Horoscope in Tamil: இன்றைய தினமான அக்டோபர் 28ம் நாள் (28-10-26) எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என பஞ்சாங்க அடிப்படையில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேஷம் - நிறைவு

வியாபாரத்தில் புதிய பாதைகள் புலப்படும். எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பாராத வரவு வந்து சேரும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும்.

ரிஷபம் - பெருமை

மனதளவில் ஒருவிதக் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும்.

மிதுனம் - பொறுமை

ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை பற்றிய புரிதல் மேம்படும்.

கடகம் - வெற்றி

உடல் ஆரோக்கியம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு கிடைக்கும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் மறையும். எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். சபை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

சிம்மம் - கவலை

பெரியோர்களின் ஆலோசனைகளால் செயல்களில் இருந்த குழப்பம் விலகும். புது விதமான சிந்தனைகள் மூலம் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் புரிதலும் மேம்படும். உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். வியாபார பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கன்னி - சோதனை

வாழ்க்கைத்துணை வழியில் அனுசரித்து செல்லவும். கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும். மாமன் வழி உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியங்கள் சாதகமாக முடியும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். பயனற்ற வாதங்களை தவிர்க்கவும்.

துலாம் - ஊக்கம்

மனதில் குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பலமுறை யோசித்துச் செயல்படவும். சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். நினைத்த செயல்களை முடிப்பதில் அலைச்சல் ஏற்படும்.

விருச்சிகம் - மகிழ்ச்சி

தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

தனுசு - நலம்

வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும். உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும்.

மகரம் - தடங்கல்

உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும்.

கும்பம் - செலவு

செயல்பாடுகளில் இருந்த தடைகள் குறையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறவிட்ட சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். எண்ணங்களில் இருந்த குழப்பம் விலகும்.

மீனம் - சுகம்

மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். சுப முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். திடீர் வரவுகளால் நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.