இன்றே பங்குனி மாத கடைசி நாள்! முருகன், சிவன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

1 day ago 1
ARTICLE AD

தமிழ் மாதங்களில் கடைசி மாதமாக கருதப்படும் மாதம் பங்குனி, தமிழ் புத்தாண்டாக கருதப்படும் சித்திரை மாதம் நாளை பிறக்கிறது. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது.

பங்குனி மாத கடைசி நாள்:

அந்த வகையில், பங்குனி மாதம் சிவபெருமான், முருகப்பெருமான், விஷ்ணு என பல கடவுள்களுக்கும் உகந்த மாதமாக திகழ்கிறது. குறிப்பாக, முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது. இந்த பங்குனி மாதத்தில் முருகனுக்கு மாலை அணிந்தும், விரதம் இருந்தும் பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு வருவது வழக்கம்.

இன்று பங்குனி மாத கடைசி நாள் என்பதால் முருகன் கோயில்களில் காலை முதல் கூட்டம் அலைமோதுகிறது. மாலை அணிந்து கோயில்களுக்கு வருபவர்கள், பால்குடம் எடு்த்து நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், அலகு குத்தி வேண்டுக்கொண்டவர்கள், காவடி எடுத்து வருபவர்கள் என காலை முதலே திரளாக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அரோகரா கோஷம்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச் சோலையில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் உள்ள வடபழனி கோயிலும் பக்தர்கள் கூட்டம் காலை முதலே அதிகளவு காணப்படுகிறது. இதுதவிர இன்னும் மற்ற முருகன் கோயில்களிலும் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் பக்திப்பரவசத்துடன் அலைமோதி வருகின்றனர்.

சிவாலயங்களிலும் கூட்டம்:

இதுதவிர, சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் காலை முதலே வழக்கத்தை விட பன்மடங்கு குவிந்து வருகின்றனர். சோமவாரமான திங்கட்கிழமையான இந்த நாள் மட்டுமின்றி பங்குனி மாத கடைசி நாள் என்பதாலும் அலைகடலென பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சிவபெருமானுக்கு திங்கள்கிழமை மிகவும் உகந்த நாள் என்பதால் திருவண்ணாமலை போன்ற புண்ணிய தலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

நாளை தமிழ் புத்தாண்டு:

பங்குனி மாத கடைசி நாள் இன்று என்பதால் தமிழ்நாட்டின் பல கிராமங்களிலும் பங்குனி மாத திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. சித்திரை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக தமிழ் மக்கள் கொண்டாடும் சூழலில், நாளை தமிழ் புத்தாண்டை கோலாகலமாக மக்கள் கொண்டாட உள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காக இன்றும், நாளையும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய புகழ்பெற்ற கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களுக்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

Read Entire Article