இனி வாட்ஸப் மூலம் ஆதார் அட்டையைப் பெறலாம்; UIDAI தேவையில்லை- இதோ முழு வழிகாட்டி!

2 months ago 4
ARTICLE AD

ஆதார் அட்டை இன்று ஒவ்வொரு இந்தியரின் அடையாளமாக மாறிவிட்டது. எங்கே போனாலும் ஆதார் எங்கே என்றுதான் எல்லோரும் கேட்கிறார்கள். பேங்கிங், அரசு சேவைகள், தனியார் சேவைகள், டிக்கெட் புக்கிங் என எல்லாவற்றுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது.

ஆதார் அட்டையை நாம் வைத்திருந்தாலும் வெளியே செல்லும்போது ஆதாரை எடுத்துச்செல்ல மறந்திருப்போம். ஆதார் எண்ணும் நினைவில் இருக்காத சூழல் உருவாகி இருக்கும். இந்த நிலையில், ஆதார் அட்டையைப் பெற, UIDAI இணையதளத்துக்குச் செல்லாமல், வாட்ஸப் மூலமாகவே பெறலாம். இந்தியக் குடிமகன்களுக்கு இதற்கான வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, MyGov உதவி மைய சாட்பாட் மூலம், இந்த ஆதார் அட்டை பிடிஎஃப் கோப்பை நாம் வாட்ஸப்பிலேயே பெறலாம்.

வாருங்கள்,

வாட்ஸப்பிலேயே ஆதார் கார்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

MyGov உதவி மையத்தின் வாட்ஸப் எண்ணான +91-9013151515 –ஐ போனில் சேமிக்கவும்.

அதை வாட்ஸப் பக்கத்துக்குச் சென்று திறக்கவும்.

'Hi' என்று சொல்லி உரையாடலைத் தொடங்கவும்.

அதில், “DigiLocker Services” என்ற தெரிவைத் தேர்வு செய்யவும்.

டிஜிலாக்கர் கணக்கு இல்லையெனில், உடனடியாக டிஜி லாக்கர் பக்கத்துக்குச் சென்று உருவாகவும். ஆதாருடன் டிஜி லாக்கர் கணக்கு இணைக்கப்பட்டிருண்டால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவும்.

ஆதாருடன் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை வாட்ஸப் சாட்டில் உள்ளீடு செய்யவும்.

உங்களின் டிஜிலாக்கர் கணக்கில், சில ஆவணங்களின் பட்டியல் சேமிக்கப்பட்டு இருக்கும். அதில், ஆதார் கார்டு என்பதைத் தேர்வு செய்யவும்.

உங்களின் ஆதார் கார்டு, வாட்ஸப் சாட்டிலேயே பிடிஎஃப் கோப்பு பதிவிறக்கம் ஆகி இருக்கும்.

இதை மறக்காதீங்க!

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை சரிபார்ப்புக்காக உங்கள் ஆதார் மற்றும் டிஜிலாக்கர் கணக்குடன் இணைக்க வேண்டும்.

இந்த வாட்ஸப் ஆவணம் பாதுகாப்பானது மற்றும் UIDAI-ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

இந்த சேவை எல்லா நேரமும் கிடைக்கிறது. இதற்கு, UIDAI தளத்தைப் பார்வையிடவோ, அதன் போர்ட்டலைப் பயன்படுத்தவோ அல்லது சிக்கலான கேப்ட்ச்சாவை உள்ளிடவோ தேவையில்லை.

Read Entire Article