இனி நோ டென்ஷன்... தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்தது

6 months ago 7
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சை, பட்டுக்கோட்டை நான்கு வழிச்சாலை பணிகளை தஞ்சாவூர் தர கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் த.மதன்குமார் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை ஒரு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த சாலை இருவழிச் சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையை பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி தண்ணீரை சிக்கனமாகவும், சீராகவும் பயன்படுத்தி விவசாயத்தை கையாள வேண்டும் என கற்றுக்கொடுத்துள்ளார் மன்னன் கரிகாலச்சோழன்.

சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை நெல் சாகுபடி என விவசாயிகள் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூரின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். முப்போகமும் நெல் விளைச்சல் பெறுவதால்தான் தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என போற்றப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அதிகம் கிராமப்பகுதிகளை கொண்டது ஆகும்.

கிராமப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதை நெல், பூச்சி மருந்துகள் என அனைத்தையும் வாகனங்களில்தான் எடுத்துச் செல்கின்றனர். இதனால் தஞ்சாவூர் நகரத்தின் வெளிப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து மிகுந்தே காணப்படும். இதில் முக்கியமாக தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலை எந்நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நான்கு வழிப்பாதை வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைத்துறை ஒரத்தநாடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட துறையூர் முதல் ஒரத்தநாடு வரை உள்ள சாலையானது நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் முடிவு பெற்றுள்ளது. இந்த பணிகளை தஞ்சாவூர் தர கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் த.மதன்குமார் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையின் கனம், வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்தார். இந்த ஆய்வின்போது தர கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால், ஒரத்தநாடு உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் விஜய், விமல் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலை நான்குவழி சாலையாக மாற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும். முக்கியமாக பஸ்களின் பயணிக்கும் மக்கள் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டைக்கு செல்லும் பயண நேரம் தடையின்றி, தாமதமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியும்.

Read Entire Article