இனி எல்லாம் ஈஸி தான் ! ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரமாண்டமாக தயாராகும் பேருந்து நிலையம்

9 months ago 6
ARTICLE AD

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் 1985-ம் ஆண்டு கட்டப்பட்ட பேருந்து நிலையம் நெருக்கடியுடன் போதிய வசதிகள் இல்லாமல் இருப்பதால் ரூ.13 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி தொடங்கி வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம்

விருதுநகர் மாவட்டம் ஆன்மிக நகரான ஸ்ரீவில்லிபுத்தூரில் 1985-ம் ஆண்டு கட்டப்பட்ட பேருந்து நிலையம் நெருக்கடியுடன் போதிய வசதிகள் இல்லாமல் இருப்பதால், ரூ.13 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என 2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

இதற்காக புதிதாக அமைக்கப்பட்டு வரும் மதுரை - கொல்லம் 4 வழிச்சாலையில் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை சந்திக்கும் இடத்தில் 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு 1.26 லட்சம் சதுர அடி பரப்பளவில் 36 பேருந்துகள் நிறுத்தும் வசதி, இரு உணவகங்கள் உட்பட 64 கடைகள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகம், சுகாதார வளாகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட பயணிகளுக்கான அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலைய கட்டுமாணப் பணிகள் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: Chromepet Subway: 15 வருட காத்திருப்பு.. தினமும் நெருக்கும் ட்ராஃபிக், ஜிஎஸ்டி சாலைக்கான அணுகல் எளிதாவது எப்போது??

புதிய பேருந்து நிலையத்துக்கு ஆண்டாள் பெயர் சூட்டப்பட்டுமா

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் தான் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளது. பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியார் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை தமிழ் பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலையத்துக்கு ஆண்டாள் பெயர் சூட்டப்பட்டுமா என கோரிக்கை எழுந்துள்ளது.

90 சதவீத பணிகள் நிறைவு

90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், நான்கு வழிச் சாலையில் இருந்து பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் எளிதாகச் சென்று வர வழி இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நான்கு வழிச் சாலையில் மாநில நெடுஞ்சாலை குறுக்கிடும் இடங்களில் இருபுறமும் வாகனங்கள் சென்று வர தனித்தனியாக அணுகு சாலை அமைக்கப்படும். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதைக்கும் சேர்த்து மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளதால், ஒருபுறம் மட்டுமே அணுகு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ரயில் தண்டவாளம் உள்ள பகுதியில் அணுகு சாலை அமைக்கப்படவில்லை.

இதையும் படிங்க:  SETC Bus Timings: கிளாம்பாக்கம் போக வேண்டாம்.. விரைவு பஸ்களில் இனிமேல் தென் மாவட்டத்துக்கு ஈசியா போகலாம்.. முழு விவரம்

இதனால் மதுரையில் இருந்து வரும் பேருந்துகள் அணுகு சாலை வழியாக பேருந்து நிலையம் வந்து விட்டு, மீண்டும் அதே பாதையில் திரும்பி நான்கு வழிச்சாலையில் U டர்ன் அடித்து செல்ல வேண்டும். ராஜபாளையத்தில் இருந்து வரும் பேருந்துகள் மதுரை செல்வதற்கான அணுகு சாலையில் U டர்ன் அடித்து திரும்பி சிவகாசி சாலைக்கு வந்து, வாகனங்கள் இறங்கும் அணுகு சாலையில் சென்று பேருந்து நிலையம் வர வேண்டும். மீண்டும் அதே வழியாகத் திரும்பிச் சென்று மதுரை செல்ல வேண்டும். இந்த சிக்கல்களால் பேருந்துகள் பேருந்து நிலையத்தினுள் செல்லாமல் நான்கு வழிச்சாலை ஓரத்திலேயே பயணிகளை இறக்கி விட்டுச் செல்ல வாய்ப்புள்ளது.

எனவே நகராட்சி துறை தேசிய நெடுஞ்சாலை துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேம்பாலம் அருகே நான்கு வழிச்சாலையில் கிராசிங் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அணுகு சாலை இல்லாமல் பேருந்து நிலையத்துக்கு வாகனங்கள் வந்து செல்ல தனிசாலை ஏற்படுத்தினால் மட்டுமே பேருந்து நிலையம் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் கூறினர்.

Read Entire Article