இனி 'NO' விபத்து! விழுப்புரம் கலெக்டரின் 'மெகா பிளான்'... அதிரடி உத்தரவுகளின் முழு விபரம்!

4 months ago 9
ARTICLE AD

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் இல்லாத நிலையை உருவாக்க, துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,

விழுப்புரம் மாவட்டத்தில், நடைபெற்ற சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும், விபத்துகளுக்கான காரணங்கள் குறித்தும், விபத்து நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறியப்பட்டது.

மேலும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடைபெற்றுவரும் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததுடன், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை, இதர அனைத்து சாலைகளில், நகர்ப்பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணித்து அவ்வாறு நிறுத்தப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து, மீண்டும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சாலைகளிலும் வேகத்தடை (Speed Breaker) தொலையிலிருந்தே தெரியும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயின்டால் கோடுகள் வரைய வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு செய்து, சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் முழுமையாக இல்லாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் தகவல் பலகை (Sign Boards), வாகன நிறுத்திட பலகை (Parking Boards) தேவையான இடங்களில் அமைக்கப்பட வேண்டும். சந்திப்பு சாலைகளில் (Junction Point) மேம்படுத்திடவும், தேவையான இடங்களில் ஆய்வு செய்து உயர்கோபுர மின் விளக்குகள் (Highmas light) அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திசைகாட்டும் பலகைகளை (Sign Boards) 50 மீட்டருக்கு முன்னரே நிறுவ வேண்டும், சாலை ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.மதிவாணன், இ.கா.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.ஸ்ரீ ரஜத், இ.ஆ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) செல்விகதிர் செல்வி, செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் திருசைத்தன்யா, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் திருசையத் அமனுல்லா, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சீனிவாசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர

Read Entire Article