காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா எச்சரித்துள்ளது. அதன்படி, இந்தூஸ் நீர் ஒப்பந்தம், விசா ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், தூதரகம் மூடல் என பாகிஸ்தானிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆனால், தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே, அதற்கு தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் விளக்கமளித்தது. ஆனாலும், அதை ஏற்க மறுத்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியா VS பாகிஸ்தான் யாரிடம் அதிக ராணுவ வீரர்கள் உள்ளனர் ?

இந்தியாவைப் பொறுத்தவரை 21,97,117 ராணுவ வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானை பொருத்தவரை 13,11,500 ராணுவ வீரர்கள் மட்டுமே உள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 25 லட்சத்தி 27 ஆயிரம் துணை இராணுவ படையினர் உள்ளனர். பாகிஸ்தானை பொருத்தவரை சுமார் 5 லட்சம் துணை ராணுவ படையினர் உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 252 கடற்படை வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானை பொறுத்தவரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 800 கடற்படை வீரர்கள் உள்ளனர். இந்தியாவிடம் 3 லட்சத்து 10 ஆயிரம் விமானப்படை வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானிடம் 78 ஆயிரத்து 128 விமானப்படை வீரர்களே உள்ளனர்.

ராணுவ தளவாடங்கள்

இந்தியாவிடம் 2229 விமானங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 1399 விமானங்கள் மட்டுமே உள்ளன. இந்தியாவிடம் 513 போர் விமானங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 328 போர் விமானங்கள் உள்ளன. இந்தியாவிடம் 899 ஹெலிகாப்டர்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 373 ஹெலிகாப்டர்கள் உள்ளன. இந்தியாவிடம் தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்கள் 80 உள்ளன. பாகிஸ்தானிடம் 57 தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்கள் உள்ளன.

இந்தியாவிடம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 594 கவச வாகனங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 17,516 கவச வாகனங்கள் உள்ளன. பீரங்கி மற்றும் பீரங்கி வாகனங்கள் 4201 இந்தியாவிடம் உள்ளன. பாகிஸ்தானிடம் 2,627 பீரங்கிகள் உள்ளன. இதேபோன்று இந்தியாவிடம் நீர்மூழ்கி கப்பல்கள் 18 உள்ளது. பாகிஸ்தானிடம் 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

Date Source: Data Fire Power