இந்த ஊருக்கு தனியார் முன்னணி நிறுவனங்கள் வர்றாங்க... வேலை வாய்ப்பு தர்றாங்க!!!

7 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வரும் 23ம் தேதி காலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி வருகின்ற 23.05.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்தல் அவசியம். தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article