<p>பிரபல ரவுடிகள் என கூறப்படும் ராக்கெட் ராஜா, நடுவீரப்பட்டு லெனின் மற்றும் நெடுங்குன்றம் சூர்யா ஆகிய 3 பேர் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் நுழைய தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் ஒரு வருடத்திற்கு சென்னை மாநகர காவல் எல்லைக்குள் நுழைய கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p>