தெலுங்கில் யே மாயா சேசாவே என்ற படத்தின் மூலம் டோலிவுட் திரையுலகில் நுழைந்த சமந்தா, மகேஷ் பாபுவின் 'தூக்குடு' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இந்தப் படத்திற்குப் பிறகு, அவருக்கு ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் நடிக்க அதிக அளவில் வாய்ப்புகள் கிடைத்தன. அல்லு அர்ஜுன், ராம் சரண், பவன் கல்யாண், என்.டி.ஆர் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடனும், பின்னர் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, நானி போன்ற எங் ஹீரோக்களுடன் படங்களில் நடித்தார். தற்போது நாக சைதன்யா உடனான விவாகரத்திற்குப் பிறகு நல்ல கதாபாத்திரங்களையும், அதற்கேற்ற கவர்ச்சியையும் வாரி வழங்கி மீண்டும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மற்றொருபுறம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி படம் மூலமாக டோலிவுட் ஹீரோவாக இருந்த பிரபாஸ் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார். 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல நடிகைகள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ஆனால் “ஊ சொல்றீயா?” பாடல் மூலம் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகையே அதிர வைத்த சமந்தாவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இருவரும் சேர்ந்து நடிப்பதில் மிகப்பெரிய சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் பிரபாஸ் ஆஜானுபாகுவான உடல் கட்டை கொண்டவர். இவரது உயரம் 6.2ஆக உள்ள நிலையில், நடிகை சமந்தா 5.2 அடி உயரமே உள்ளார். இதனால் இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடித்தால் இவர்களின் உயர வித்தியாசம் படத்தில் வெளிப்படையாக தெரியும் என்பதால் இந்த ஜோடியை இணைப்பதில் சிக்கல் உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சாஹோ படத்தில் நடிகை சமந்தாதான் ஹீரோயினதாக நடிக்க வேண்டியதாம். இந்த உயரத்தை காரணம் காட்டி அந்த படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்யவில்லையாம். ஆனால் இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்தார், ஆனால் அவரது உயரமும் 5.2 தான். அப்படியானால் உயரம் பிரச்சனை இல்லை, இருவரது கூட்டணியிலும் படம் வராமல் இருக்க வேறு காரணம் இருக்கும் என சினிமா ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.