" இது தப்பு இல்ல கிட்ட வா " ஆதார் அட்டை நகல் எடுக்க சென்ற சிறுமி !! சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

1 month ago 7
ARTICLE AD

தாய் - தந்தை இல்லாத சிறுமி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் அவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

செந்தில் குமார் வீட்டில் இருந்தே நெசவு தொழில் செய்து வந்த நிலையில் தினமும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொறு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தாய் தந்தை இல்லாத நிலையில் அவரது பெரியப்பாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்திருக்கிறார். அந்த சிறுமியும் செந்தில் குமாரின் மகளும் ஒரே வகுப்பில் பயின்று வந்ததால் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். செந்தில் குமார் அவரது மகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது அவ்வப் போது சிறுமியையும் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்திருக்கிறார்.

ஆதார் கார்டு நகல் - சிறுமியை தனியாக அழைத்து சென்ற நபர்

இந்நிலையில் வழக்கம் போல இரண்டு தினங்களுக்கு முன்பு செந்தில் குமார் அவரது மகளையும் சிறுமியையும் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது சிறுமி பள்ளியில் அரசு உதவித் தொகை பெறுவதற்கு ஆதார் அட்டை நகல் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே செந்தில் குமார் அவரது மகளை பாதி வழிலேயே இறக்கி விட்டு விட்டு அந்த சிறுமி அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு சிறுமியின் வீட்டில் அவரது பெரியப்பா இல்லாத நிலையில் செந்தில் குமார் தனியாக இருந்த சிறுமியிடம் பாப்பா இதெல்லாம் தப்பே இல்ல கிட்ட வா என கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

உனது தந்தை இப்படி செய்து விட்டார்

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரிடம் இருந்த தப்பித்து அவரது மகளிடம் சென்று நடந்துவற்றை உனது தந்தை இப்படி செய்து விட்டார் என்று தோழியிடம் தெரிவித்து விட்டு பள்ளிக்கு சென்றிருக்கிறார்.

பின்னர் பள்ளியில் மற்றொரு மாணவியிடம் தெரிவித்த நிலையில் இரண்டு மாணவிகளும் சேர்ந்து சைல்ட் ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் சிறுமிக்கு நடந்தது குறித்து பள்ளியில் இருந்த ஆசிரியர் ஒருவரிடம் தெரிவித்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து ஆசிரியர் சிறுமியின் பெரியப்பாவிற்கு தகவல் அளித்த நிலையில் அவர் திருத்தணி அனைத்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். உடனடியாக வழக்கு பதிவு செய்து இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் நெசவு தொழிலாளி செந்தில்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். தொடர்ந்து அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.

Read Entire Article