இது சினிமாவில் வரும் டயலாக் – விஜயை கலாய்த்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

9 months ago 8
ARTICLE AD

பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசிய கருத்து சினிமாவில் வரும் டயலாக் போல் உள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் “வேளாண் பட்ஜெட் தொடர்பாக அனைத்து மாவட்டத்திலும் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டுள்ளோம். அவை அனைத்தும் வேளாண் பட்ஜெட்டில் எதிரொலிக்கும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; 2026 திமுகவை அகற்றுவோம் என விஜய் பேசியிருப்பது சினிமாவில் வரும் டயலாக் போல் உள்ளது.

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் பங்கு என பல திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். பெண்களுக்கு சம உரிமை அளித்து அவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளது யார்? என அனைவருக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளார்.

Read Entire Article