தனுஷ் இயக்கியுள்ள இட்லி

நடிகர் தனுஷ் இயக்கி டான் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இட்லி கடை திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. நித்யா மேனன் , ராஜ்கிரண் , அருண் விஜய் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இட்லி கடை படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையில் தனுஷ் நடிகை மிருணாள் தாகூரை காதலித்து வருவதாக அண்மையில் தகவல்கள் பரவி வருகின்றன . குறிப்பாக மிருணால் தாகூர் நடித்துள்ள படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு தனுஷ் சென்றிருந்தது இந்த வதந்திக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இப்படியான நிலையில் தனுஷ் மிருணால் தாகூர் டேட்டிங் பற்றி நடிகர் இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனுஷ் ஒரு சகலகல வல்லவன்

"இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘ இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது. இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால்(மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன் இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்!!!" என அவர் பதிவிட்டுள்ளார்.

இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘ இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன்.… pic.twitter.com/NU8IU1W2Mf

— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 16, 2025