சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடம் மாற்றம் - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் , 1997 - ம் ஆண்டு முதல் , வடசென்னை பாரிமுனையில் ராஜாஜி சாலையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. கடந்த 1791 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, மூன்று லட்சமாக இருந்த மக்கள் தொகை, 2011ல் 46.46 லட்சமாக உயர்ந்தது. தற்போது, ஒரு கோடியை தாண்டி யுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த சில பகுதிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இந்த பகுதிகள் நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

இதனால், 178 சதுர கி.மீ ஆக இருந்த சென்னை மாவட்ட பரப்பளவு 426 கி.மீ., ஆக விரிவடைந்துள்ளது. பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இந்த கலெக்டர் அலுவலக வளாக கட்டடத்தில் , நீதிமன்றம் உள்ளிட்ட இதர துறைகளும் உள்ளன. இதனால் இடநெருக்கடி ஏற்படுவதுடன் போராட்டங்களின்போது போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் உள்ள இடத்தில் , நீதிமன்ற அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்தை தென்சென்னையில் உள்ள கிண்டிக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, கிண்டி, வெங்கடாபுரம் கிராமத்தில், 3.63 ஏக்கர் இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மதிப்பு 92.8 கோடி ரூபாய். இந்த இடத்தில் கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் உள்ளது போல் , கலெக்டர் மாவட்ட வருவாய் அதிகாரியின் முகாம் அலுவலகம் அமைய உள்ளது. இதற்கான இடத்தை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு ஒதுக்கி , அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

ரூ.500 கோடியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மேம்பாடு - விரைவில் அரசாணை

சென்னை கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கத்தின், நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் புதிதாக கட்டப்பட்ட புகழ் மண்டபத்தை திறந்து வைத்தார். விழாவில் கோவி.செழி பேசுகையில் , அகில இந்திய அளவில் முனைவர் பட்டம் பெறுவர்களின் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 1944ல் இன்ஜினியரிங் படிப்பில் பெண் ஒருவர் சேர்ந்த கல்லுாரி என்ற பெருமை கிண்டி இன்ஜினியரிங்ரிக்கு உண்டு என்றார். உயர்கல்வித் துறை செயலர் சங்கர் பேசுகையில் , அண்ணா பல்கலை 500 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட உள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்றார்.