தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், திருவையாறு, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் 236 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இளங்கலை இசை பிரிவில் குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதசுரம், தவில் ஆகியவை முதன்மைப் பாடங்களாகவும், முதுகலை இசை பிரிவில் குரலிசை, வீணை ஆகியவை முதன்மைப் பாடங்களாகவும், மூன்றாண்டு பட்டயப் படிப்பில் குரலிசை, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதசுரம், நாட்டுப்புறக்கலை ஆகியவை முதன்மைப் பாடங்களாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

மேலும் ஓராண்டு பட்டயம் நட்டுவாங்கம் மற்றும் ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி ஆகியவையும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இசையில் முனைவர் பட்ட ஆய்வு (முழுநேரம்/பகுதி நேரம்) மேற்கொள்ளும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது. மேற்கூறிய பாடப்பிரிவுகள் அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்று நடத்தப்படுகிறது.

தற்போது 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளில் புதிதாக சேர்வதற்கான அடிப்படை கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இளங்கலை இசை (B.A.Music) பாடப்பிரிவில் (3 ஆண்டுகள்) குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதசுரம், தவில் ஆகிய பட்டப் படிப்பு பயில 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 17 வயது நிரம்பியிருத்தல் இருத்தல் வேண்டும். முதுகலை இசை (M.A.Music) பாடப்பிரிவில் (2 ஆண்டுகள்) குரலிசை, வீணை ஆகிய் பட்ட மேற்படிப்பு பயில இளங்கலை இசையில் (B.A.Music) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

பட்டயம் (Diploma) பாடப் பிரிவில் (3 ஆண்டுகள்) குரலிசை, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், நாதசுரம், தவில், நாட்டுப்புறக்கலை ஆகிய பட்டயம் (Diploma) பயில அடிப்படை கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 வயது முதல் 30 வரை இருத்தல் வேண்டும். ஓராண்டு நட்டுவாங்கப் பயிற்சி பட்டயப் படிப்பு (Diploma) பயில. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், இளங்கலை பரதநாட்டியம் அல்லது மூன்றாண்டு பரதநாட்டிய பட்டயம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 35 வரை இருத்தல் வேண்டும்.

ஓராண்டு பட்டயப் படிப்பு இசை ஆசிரியர் பயிற்சி (Diploma in Music Teaching) பயில 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், இளங்கலை இசையில் குரலிசை/ வீணை/ வயலின் பிரிவில் பட்டம் (அல்லது) மூன்றாண்டு இசை பட்டயம் குரலிசை/ வீணை/ வயலின் (அல்லது) இசையில் இதற்கு நிகரான பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 35 வரை இருத்தல் வேண்டும். இசையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள (Ph.D. in Music) கல்வித் தகுதி மற்றும் ஏனைய விவரங்களை அறிய தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியான www.tnjjmfau.in தொடர்பு கொள்ளவும்.

மேலும் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி (ஓராண்டு சான்றிதழ்) படிப்புகளான இசை நாடகம், கும்மி கோலாட்டம், சிலம்பாட்டம், பாட்டம், தப்பாட்டம் ஆகியவை இசைக்கல்லூரி வளாகத்தில் பிரதி வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். இதில் சேர்ந்து பயில 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வயது வரம்பு 17 வயது முதல் ஆகும்.

மேற்காணும் தகுதியுடன் இக்கல்லூரியில் சேர விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள இசைக் கல்லூரிக்கு நேரிலோ அல்லது இணைய வழியிலோ www.artandculture.tn.gov.in அதற்கான விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். (தொடர்புக்கு
[email protected]) 04362-261600. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.